ஒகேனக்கல் அருவியில் குளிக்க தொடரும் தடை
தருமபுரி, ஜூலை 11- ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருவ தால், அருவியில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்க வும் 17 ஆவது நாளாக தடை தொடர்கிறது. தமிழக - கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறை வதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்க ளாக தமிழக காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை யின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வியாழனன்று விநாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, வெள்ளியன்று காலை நிலவரப்படி விநா டிக்கு 28 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இருந்த போதிலும் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்ப ரித்து கொட்டியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பரிசலில் செல்லவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடையா னது 17 ஆவது நாளாக நீடிக்கிறது. காவிரி ஆற்றில் நீர் வரத்தை பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதி காரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வரு கின்றனர்.