விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
கோவை, ஜூலை 27- தேச ஒற்றுமையை வலியுறுத்தி மற்றும் முழங்கால் ஆரோக்கிய விழிப்புணர்வு மாரத் தான் போட்டி ஞாயிறன்று நடைபெற்றது. கோவை விஜிஎம் மருத்துவமனை மற் றும் கோவை அத்லெடிக் கிளப் இணைந்து “ரன் ஃபார் நேசன் 2025” என்று தலைப்பில், முழங்கால் ஆரோக்கியம் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஞாயிறன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. நேரு மைதானத்திலிருந்து துவங்கிய போட்டியில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர். இந்தாண்டு மாற்றுத்திறனாளிகளை ஊக் குவிக்கும் வகையில், சுமார் 150 மாற்றுத்திற னாளிகள் இருசக்கர நாற்காலி மூலம் போட்டி யில் பங்கேற்றனர்.