சங்ககிரி, ஏற்காடு, ஓமலூரில் கலைக்கல்லூரிகள்
மாணவர் சங்க சேலம் மாநாட்டில் தீர்மானம்
சேலம், ஜூலை 10- சங்ககிரி, ஏற்காடு, ஓமலூர் உள் ளிட்ட பகுதிகளில் அரசு கலைக் கல்லூரிகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்க சேலம் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் மாவட்ட 25 ஆவது மாநாடு, சேலம் தமிழ் சங்க அலுவலகத்தில் வியாழனன்று, மாவட்டத் தலைவர் வி.அருண்குமார் தலைமை வகித்து கொடியேற்றினார். முன்ன தாக, அம்பேத்கர் சிலை அருகே இருந்து துவங்கிய பேரணி மாநாட்டு அரங்கத்தை வந்தடைந் தது. மாவட்ட துணைத்தலைவர் அபிராமி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கமல்நாத் வரவேற்றார். மாநிலச் செயலாளர் கோ.அரவிந்த சாமி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்டச் செய லாளர் எஸ்.பவித்திரன் அறிக் கையை முன்வைத்தார். இதனையடுத்து, மாதர், வாலி பர் சங்கங்களின் நிர்வாகிகள் பெரி யசாமி, வைரமணி, சுரேஷ் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், சேலம் மாவட் டத்திற்குட்ட ஏற்காடு, சங்ககிரி, ஓம லூர் சட்டமன்ற தொகுதிகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கள் அமைக்க வேண்டும். மாணவர் களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விடுதி கட்டமைப்பு வசதிகளை மேம்ப டுத்த வேண்டும். சேலம் பெரியார் பல்கலைக்கழகம் உயர்த்திய தேர்வு கட்டணத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். ஏற்காடு அடிவாரத்திலிருந்து சேலம் மகளிர் அரசு கலைக்கல்லூரி, ஐடிஐ கல் லூரி, சேலம் அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) வழியாக பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் வரை கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்து களை மாவட்ட நிர்வாகம் இயக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவராக கு. டார்வின், மாவட்டச் செயலாள ராக எஸ்.பவித்திரன், மாவட்ட துணைத்தலைவர்களாக கமல் நாத், அபிராமி, மாவட்ட துணைச் செயலாளர்களாக பெரியசாமி, எஸ்.கோகுல் உட்பட 25 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. சங்கத்தின் மாநி லத் தலைவர் தௌ.சம்சீர் அகமது நிறைவுரையாற்றினார். கோகுல் நன்றி கூறினார்.