tamilnadu

img

மரக்கன்றுகள் நடும் விழா

நாமக்கல், ஆக.30- திருச்செங்கோடு சந்தைப் பேட்டை பகுதியிலுள்ள அறி வுசார் மையத்தை சுற்றி யுள்ள பகுதிகளில் மரக்கன்று கள் நடும் விழா நடைபெற் றது. தமிழ்நாடு முழுவதும் உள்ள நகரப் பகுதிகளில், ‘அர்பன் கிரீனிங் பிரச்சார இயக்கம்’ நடத்துவது என முடிவு செய்யப் பட்டு, ‘பசுமையை சிந்திப்போம் பசுமையாக இருப்போம் பசுமையுடன் வாழ்வோம்’ என்ற  தலைப்பில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நகர்மன்ற உறுப்பி னர்கள் மரக்கன்றுள் நட வேண்டும் என தமிழ் நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெள்ளியன்று நடந்த நகர்மன்ற கூட்டத்தில், ஆணையர் (பொ) பிரேம் ஆனந்த் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதைய டுத்து திருச்செங்கோடு, சந்தைப்பேட்டை அருகிலுள்ள அறிவுசார் மையத்தை சுற்றி யுள்ள பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட மரக் கன்றுகள் நடும் விழா சனியன்று நடைபெற் றது. நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தலைமையில், நகர்மன்ற உறுப்பினர்கள், மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டனர்.