பட்டியலினத்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தொழிற்கூடங்களை விரைந்து ஒப்படைக்க தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்
ஈரோடு, ஜூலை 27- பெருந்துறை சிப்காட் வளா கத்தில் பட்டியலினத்தவர்களுக் காக அமைக்கப்பட்ட தொழிற்கூ டங்களை விரைந்து ஒப்படைக்க வேண்டுமென தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஈரோடு மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஈரோடு மாவட்ட 5 ஆவது மாநாடு, சாதி மறுப்பாளர் கள் சங்கமமாக பெருந்துறையில் ஞாயிறன்று நடைபெற்றது. தோழர் எம்.நாச்சிமுத்து நுழைவாயிலை அடுத்து அமைக்கப்பட்ட தோழர் யு.கே.சிவஞானம் நினைவரங்கில் நடைபெற்ற மாநாட்டிற்கு மாவட் டத் தலைவர் பி.பி.பழனிசாமி, விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.சண்முகவள்ளி, என்.சுந்தரவடிவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஏ. விஸ்வநாதன் அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். வரவேற்புக் குழு தலைவர் கே.குப்புசாமி வர வேற்றார். அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் க. சாமிநாதன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட் டச் செயலாளர் மா.அண்ணாதுரை, பொருளாளர் சி.ஜோதிமணி ஆகி யோர் அறிக்கைகளை முன்வைத்த னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகு ராமன், பெருந்துறை தாலுகா செய லாளர் ஆர்.அர்ச்சுனன், விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. எம்.முனுசாமி, மாதர் சங்க மாவட் டச் செயலாளர் பா.லலிதா, தமு எகச மாவட்டத் தலைவர் மு.சங்க ரன், மாணவர் சங்க மாவட்டத் தலை வர் த.நவீன், திக சண்முகம், சமூக நீதி மக்கள் கட்சி தலைவர் ஆர்.வடி வேல்ராமன், விசிக மண்டலச் செய லாளர் பெ.சிறுத்தை வள்ளுவன் மற் றும் ஞ.மா.ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இம்மாநாட்டில், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் பட்டியலின மக்களுக்காக அமைக்கப்பட்ட தொழிற்கூடங்களை, விரைந்து பய னர்களை தேர்வு செய்து ஒப் படைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். தியாகி லட்சுமண ஐயருக்கு மணிமண்டபம் கட்டி, சிலை அமைக்க வேண்டும். வறுமையில் உள்ள மக்களை சரியான முறை யில் அடையாளம் கண்டு, அவர்க ளின் வாழ்க்கையை மேம்படுத்திட முறையான சாதிவாரி கணக் கெடுப்பை ஒன்றிய அரசு உடனே நடத்த வேண்டும். குண்டு மூப்பனூ ரில் சாலையை ஆக்கிரமித்து தெரு விளக்கு அமைக்கும் பணியைத் தடுத்து, பட்டியலின பெண்களை தாக்கிய முன்னாள் காவல்துறை அதிகாரியின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவ டிக்கை எடுக்க வேண்டும், உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து, அமைப் பின் மாவட்டத் தலைவராக பி.பி.பழனிசாமி, செயலாளராக ஏ.கே.பழனிசாமி, பொருளாளராக மா. அண்ணாதுரை, துணைத்தலைவர் களாக என்.பாலசுப்ரமணி, வி. சுரேஷ்பாபு, மாதாயி, துணைச் செயலாளர்களாக ஆர்.விஜய ராகவன், பி.பழனிசாமி, ராஜா உட் பட 30 மாவட்டக்குழு உறுப்பினர் கள் தேர்வு செய்யப்பட்டனர். விவ சாயத் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்த லிங்கம் நிறைவுரையாற்றினார். தொடர்ந்து, பறை முழக்கத்துடன் பேரணி நடைபெற்றது. பெருந் துறை பழைய பேருந்து நிலை யத்தில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.