tamilnadu

img

அந்தியூர்: தெருவிளக்கு பிரச்சனைக்கு 10 நாட்களில் தீர்வு

அந்தியூர்: தெருவிளக்கு பிரச்சனைக்கு 10 நாட்களில் தீர்வு'

காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைப்பு

ஈரோடு, ஜூலை 17- நகலூர் கிராமத்தைச் சேர்ந்த குண்டுமூப்பனூர் பட்டியலின குடியிருப்புப் பகுதியில் தெரு விளக்குகள் அமைப்பதில் நிலவி வந்த பிரச்சனைக்கு, அதிகாரிகள் 10 நாட்களுக்குள் தீர்வு காண்பதாக உறுதியளித்ததையடுத்து, தீண் டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்தி ருந்த காத்திருப்புப் போராட்டம் தற் காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள் ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒன்றியம், குண்டுமூப்பனூர் தெரு வில் உள்ள விளைநிலத்தின் உரி மையாளரான முன்னாள் காவல் துறை அதிகாரி ஒருவர், ஆக்கிர மிப்பு செய்து மரங்களை நட்டுள் ளார். இதனால் அப்பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க முடிய வில்லை. இந்த ஆக்கிரமிப்பை அகற்றி, நிலத்தை அளவீடு செய்து, மின்கம்பங்கள் அமைத்து தெரு விளக்குகள் பொருத்த வேண்டும்  என அப்பகுதி மக்கள் நீண்டகால மாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் முன்னாள் அதிகாரி தங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கா மல், அளவீடு செய்யப்பட்ட கற்களை யும் அகற்றி, பட்டியல் சாதியின ரைத் தாக்கினார். இதுகுறித்து பல முறை புகார் அளித்தும், போராட் டங்கள் நடத்தியும் நிலைமை மாற வில்லை. இதனைத்தொடர்ந்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி ஆகி யவை இணைந்து வியாழக்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. காவல்துறை அனுமதி மறுத்த போதிலும், சங் கத் தலைவர்களும், உறுப்பினர்க ளும், பாதிக்கப்பட்ட மக்களும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கூடினர். இதையடுத்து, காவல் துணை கண்காணிப்பாளர் போராட்டக் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா செயலா ளர் முருகேசன் கூறுகையில், நில  அளவீடு தொடர்பான ஆவணங்கள் வட்டாட்சியர் அலுவலகத்திலி ருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத் திற்கு வந்து சேராததே தாமதத்திற் குக் காரணம் என வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார். இதுகு றித்து வட்டாட்சியர் அலுவலகத் திற்கு கடிதம் அனுப்புவதாகவும் உறுதி அளித்ததாகக் கூறினார். 10 நாட்களுக்குள் நில அளவீடு செய்து, கற்கள் நட்டு, மின்கம்பங் கள் அமைத்து தெருவிளக்குகள் பிரச்சனையைத் தீர்த்து வைப்ப தாக அதிகாரிகள் உறுதியளித்துள் ளதாக தெரிவித்தார். இந்த உறுதிமொழியை ஏற்று, ததீஒமு மாவட்டத் தலைவர் பி.பி. பழனிசாமி தலைமையில் கூடிய  போராட்டக்குழுவினர் போராட் டத்தை தற்காலிகமாகக் கைவிட்டு கலைந்து சென்றனர். இப்போராட் டத்தில், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராகவன், தீஒமு மாவட்ட துணைத்தலைவர் ஏ.கே.பழனி சாமி, தாலுகா தலைவர் டி.ராஜா,  செயலாளர் எஸ்.செபாஸ்டியன், பொருளாளர் கே.துரையன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.