அமெரிக்காவின் வர்த்தகப்போரை கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்
தருமபுரி, செப்.9- இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சத விகித வரி விதிப்பை கண்டித்து இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்திய பொருட்களின் மீது அமெரிக்கா டிரம்ப் அரசு 50 சதவிகிதம் வரி விதித்துள் ளது. இதன்மூலம் வர்த்தப்போரை அறிவித் துள்ள டிரம்ப் அரசைக் கண்டித்தும், அமெ ரிக்க ஆதரவு வெளியுறவு கொள்கையை பிர தமர் மோடி கைவிட வேண்டும். மேலும், வரி விதிப்பை திரும்பப்பெற ஒன்றிய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இடதுசாரி கட்சியினர் செவ்வாயன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.தேவரா ஜன் தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப் பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா. சிசுபாலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கண்ட னவுரையாற்றினர். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, வே.விஸ்வநாதன், ஆர்.மல்லிகா, நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு, ஒன்றியச் செய லாளர் கே.கோவிந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.என்.மல்லையன். எஸ். கிரைஸாமேரி, ஆர்.சின்னசாமி, சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாவட்டக்குழு உறுப்பி னர் முருகன், சிபிஐ நிர்வாகிகள் புகழேந்தி, சிவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.