லாம்பூர் - மதுக்கரை இடையே 5 சுங்கச்சாவடிகள் நிரந்தரமாக மூடல்!
கோவை. ஆக.3 நீலாம்பூர் - மதுக்கரை நெடுஞ் சாலையில் 5 சுங்கச்சாவடிகள் மூடப் பட்டு, தேசிய நெடுஞ்சாலை துறை யின் ஒரே ஒரு சுங்கச்சாவடி மட் டும் செயல்பட துவங்கியது. கோவையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, கடந்த 1999 இல் நீலாம்பூரிலிருந்து மதுக் கரை வரை 28 கிலோ மீட்டர் தூரத் திற்கு புறவழிச்சாலை அமைக்கப் பட்டது. மேலும், எல்.அன்ட்.டி நிறு வனம் மூலம் அமைக்கப்பட்டதால் 30 ஆண்டுகளுக்கு சுங்கக்கட்டணம் வசூல் செய்யும் உரிமமும் அந்நிறு வனம் பெற்றது. இதற்காக நீலாம் பூரிலிருந்து மதுக்கரை வரை 6 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, கட்டணம் வசூ லிக்கப்பட்டு வந்தது. இதிலும் பல் வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. குறிப்பாக, பாஸ்டேக் மூலம் பணம் எடுக்கும் போது, ஒவ்வொரு சுங் கச்சாவடியிலும் பணம் எடுக்கப் பட்டது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தின மும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், கேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருவதால், பல கோடி ரூபாய் கூடு தல் கட்டணமாக எல்.அன்ட்.டி நிறு வனம் வசூலித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஓட்டுநர்கள் போராட்டங்களை நடத்தி இரண்டு முறை வசூலிக்கும் பணத்தை திரும்ப வங்கி கணக்கில் செலுத்த வலியுறுத்தினர். இதனிடையே, சேலம் - கொச் சின் தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்ட நிலையில், நீலாம்பூரிலிருந்து மதுக்கரை வரை இடைப்பட்ட 28 கிலோமீட்டர் தூரம் மட்டும் இரு வழிச்சாலையாகவே இருந்து வந் தது. இதனால் போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டு வருவதால், இந்த சாலையினை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. இதுதொடர்பாக ஒன்றிய அரசு எல்.அன்ட்.டி நிறு வனத்துடன் நடத்திய பேச்சுவார்த் தையில் உடன்பாடு ஏற்பட்டு, தேசிய நெடுஞ்சாலைத்துறை வசம் சாலை ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஜூன் ஒன்றாம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 6 சுங்கசாவடிகளிலும் சுங்க கட்டணத்தை வசூல் செய்து வந்தது. இந்நிலையில், ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவிப்பின்படி, புதிய சுங்கக் கட்டண வசூல் ஆக.1 ஆம் தேதி முதல் வசூலிக்கப்படும் என அறி விக்கப்பட்டது. மேலும், நீலாம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள ஆறு சுங் கச்சாவடிகளில் 5 சுங்கசாவடிகளை நிரந்தரமாக மூடிவிட்டு, ஒரே ஒரு சுங் கச்சாவடி மட்டும் செயல்படுத்து வது மற்றும் மதுக்கரை பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் மட்டும் கட்டண வசூலை தேசிய நெடுஞ் சாலை சுங்கக்கட்டண விதிகளின் படி தொடர இருப்பதாகவும் கோவை மாவட்ட நிர்வாகம் அறி வித்தது. அதன்படி நீலாம்பூர் - மதுக் கரை இடையேயான 5 சுங்கச்சாவடி கள் முழுமையாக மூடப்பட்டு, மதுக் கரை சுங்கச்சாவடி செயல்பாட் டிற்கு வந்துள்ளது. இதனால் இச் சாலையில் போக்குவரத்து நெரிசல் பல்வேறு பகுதிகளில் குறைக்கப் பட்டுள்ளது. புதிய கட்டணமாக கார், வேன், இலகு ரக வாகனங்க ளுக்கு ரூ.35, இலகு ரக சரக்கு வாக னம், மினி பேருந்துக்கு ரூ.60, லாரி, பேருந்துகளுக்கு ரூ.125 மற்றும் அடுத்தடுத்து வரும் கனரக வாக னங்களுக்கு முறையே ரூ.135, ரூ.195, ரூ.235 என சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் உள்ளூர் மக் கள் குறைவான தூரத்தை கடக்க ரூ.17 மட்டுமே செலுத்தி வந்த நிலை யில், அவர்களும் ரூ.35 கட்டணம் கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்ட தால், தினமும் நெடுஞ்சாலையில் செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டுள் ளனர். இதனிடையே புதிய கட்டண குழப்பத்தால் வாடகை வாகன ஓட்டுநர்கள் சுங்கச் சாவடி ஊழியர் களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் விரிவாக் கம் இல்லாத இந்த நெடுஞ்சாலை யில் அடிக்கடி பல்வேறு விபத்துகள் ஏற்பட்ட நிலையில், சுங்கக்கட்ட ணம் வசூலிப்பது வாகன ஓட்டிகளி டம் அதிருப்தியை ஏற்படுத்தி வந் தது. இந்நிலையில், 5 சுங்கச்சாவடி கள் மூடபட்டு, சாலை விரிவாக்க பணிகள் துவங்கவுள்ளது, வாகன ஓட்டிகளிடம் நிம்மதி பெருமூச்சை கொடுத்துள்ளது.