tamilnadu

கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் முக்கிய செய்திகள்

கடலூரில் வாக்கு எண்ணிக்கைக்கு 1,959 மேசைகள்: 6,500 பேர்
கடலூர், டிச. 31 வாக்கு எண்ணிக்கை பணியில் 6,500 பணியாளர்கள் ஈடுபடுத்தப்ப டுவதாகவும் 1,959 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு  இருக்கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தல்க ளில் பதிவான வாக்குகள் ஜன.2 ஆம் தேதி எண்ணப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் செவ்வாய்க்கிழ மையன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,“ வாக்குகள் எண்ணும் 14 மையத்திலும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு  பணியில் காவலர்கள் 3 பணி சுழற்சி முறையில் ஈடுப்பட்டு வருகின்றனர்” என்றார். ஒவ்வொரு மையத்திலும் பாதுகாப்பு அறையின் சாவி காவல்துறை  மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் வசம் வழங்கப்பட்டு 2 சாவி முறை  கடைபிடிக்கப்படுகிறது. ஜன.2 ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணும்  பணியில் 6,500 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மொத்தம் 1,959 மேiஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகிறது என்றும் அவர் கூறினார். எண்ணும் முறை தற்போது பாதுகாப்பு அறையில் பாதுகாக்கப்பட்டு வரும் வாக்குகள்  வெளியே எடுத்து வரப்பட்டு மற்றொரு அறையில் அவைகள் மாவட்ட  கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், வார்டு கவுன்சிலர்  ஆகிய பதவியிடங்களுக்கான நிறங்களுக்கேற்ப பிரிக்கப்படும். பின்னர் அவைகள் தனித்தனியாக ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு அப்பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மேசைக்கு எடுத்து வரப்படும். எந்த மேசையில் எந்த வார்டிற்கான வாக்குகள் எண்ணப்படுகிறது என்பது அறிவிக்கப்பட்டு அதற்கான முகவர்கள் அனுமதிக்கப்படு வார்கள். வார்டு உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவியிடங்களுக்கு தனித்தனியாக வாக்கு  எண்ணும் மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பஞ்சாயத்துத் தலைவர், வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  தேர்தல் பொதுப்பார்வையாளர் தலைமையில் ஒவ்வொரு அறை யிலும் ஒரு நுண்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளதோடு, சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும். வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் வாக்குச்சீட்டுகள் மீண்டும் அதே இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் ஆட்சி யர் கூறினார்.

புதுவையில் பொங்கல் பொருட்களுக்கு பதிலாக பணம்
புதுச்சேரி, டிசம்பர். 31- புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பொருட்களுக்கு பணமாக ரூ.170  வழங்கப்படுகிறது. பொங்கல் பொருட்களான பச்சை அரிசி, வெல்லம், சர்க்கரை, ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் நியாயவிலைக் கடைகள் மூலம்  இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் இது தொடர்ந்தாலும், புதுச்சேரியில் வழங்கப்படாமல் உள்ளது.  துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் முட்டுக்கட்டையால் கடந்த  மாதம் இலவச அரிசிக்கு பதில், அரிசிக்கான பணம் செலுத்தப்பட்டது. இந்நிலையில் பொருட்கள் வழங்குவதில் முறைகேடு நடக்குமாம் என்றும், அதற்கு பதில் பணம் அவர் அவரது வங்கி கணக்கில் செலுத்தப்படு கிறது. இது குறித்து நலத்துறைஅமைச்சர் கந்தசாமியிடம் செய்தியாளர்கள்  எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில், “பொங்கல் பொருட்களை வாங்குவதற்கு அனைத்து குடும்ப அட்டைதார்களுக்குகும் தலா ரூ.170 அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதற்கான கோப்புகள் தயாரித்து துணை நிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல்  அளித்தவுடன் பணம் வழங்கப்படும்” என்றார்.

செஞ்சியில் உரம் விற்பனை செய்ய தடை
விழுப்புரம்.டிச.31- விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் கூடுதல் விலைக்கு உரம்  விற்பனை செய்வதாக, மாவட்ட வேளாண்மை துறை உதவி இயக்குனர்  (தரக்கட்டுப்பாடு) சுரேஷ்குமாருக்கு புகார்கள் வந்தன,இதனையடுத்து, அவர் செஞ்சி பகுதியில் உள்ள உரக்கடைகளில் திங்கட்கிழமை திடீரென  ஆய்வு செய்தார். அப்போது, மூன்று கடைகளில் உரம் விற்பது சம்பந்த மான பதிவேடுகளில் குளறுபடி மற்றும் சரியான விலை பட்டியல் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கடைகளில் உரம் விற்பனை செய்ய தடை விதித்து, உதவி இயக்குனர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

;