states

img

‘யார் பயங்கரவாதிகள்?’ என்பதை மோடிக்கு உணர்த்துவோம்!

லக்னோ, பிப்.22- சைக்கிள் ஓட்டும் ஏழைகளை, பயங்கர வாதிகள் என்று அழைத்த பிரதமர் மோடிக்கு, ‘யார் பயங்கரவாதிகள்?’ என் பதை வாக்கு இயந்திரத்தில் பட்டனை அழுத்தி உ.பி. மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோ வில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆத ரித்து, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பா ளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ‘‘பிரதமர் மோடி உ.பி.க்கு சென்று, நாட்டில் ‘சைக்கிள்’ (சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் சின்னம்) ஓட்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று கூறியதை நான் கேள்விப்பட்டேன். சைக் கிள் ஓட்டும் அனைத்து ஏழைகள் மீதும் இது ஒரு தாக்குதலாகும்” என்று தெரி வித்தார். மேலும், “பிரதமர் மோடி ஏழைகள் அனைவரையும் ‘பயங்கரவாதிகள்’ என்று அழைக்கும் நிலையில், சைக்கிள் ஓட்டு பவர்கள் அனைவரும், வாக்களிக்க பட்டனை அழுத்தும்போது, சைக்கிள் ஓட்டுபவர்கள் தீவிரவாதிகளா? அல்லது பாஜக ஆட்கள் தீவிரவாதிகளா? என்ப தற்கு பதிலளிக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.