மணிப்பூரில் இன்று நடந்த துப்பாக்சிச்சூட்டில் 3 குக்கி பழங்குடியின இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
பாஜக ஆளும் மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் பழங்குடி அல்லாத மெய்டெய் சமூகத்தினருக்கும், குச்சி பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே இன மோதல் நடந்து வருகின்றது. இந்த வன்முறையில், ஏற்கனவே 160க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், 13 நாட்களுக்கு பிறகு நாகா சமூக மக்கள் அதிகம் வசிக்கும் உக்ருல் மாவட்டத்தில் உள்ள தோவாய் குகி கிராமத்தில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு இன்று மீண்டும் வன்முறை வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 குக்கி பழங்குடியின இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.