states

img

மணிப்பூர் வன்முறையில் குக்கி சமூக மக்கள் 114 பேர் உயிரிழப்பு!

மணிப்பூர் வன்முறையில், குக்கி சமூக மக்கள் 114 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மனநலம் பாதிக்கப்பட்ட குக்கியின பெண் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதாகவும் அம்மாநில குக்கி சமூகத்தை சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ஆம் தேதி வன்முறைகள் தொடங்கின. மே 4-ஆம் தேதி அன்றே பல்வேறு இடங்களில் பழங்குடி மக்கள் மீதான தாக்குதல்கள், பாலியல் வல்லுறவு மற்றும் கும்பல் கொலைகளும் நடந்தேறியுள்ளன. இதுவரை அந்த மாநிலத்தில் 160க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்; சுமார் 50 ஆயிரம் பேர் உள்நாட்டிலேயே அகதிகளாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 350 தேவாலயங்களும், சுமார் 20 கோயில்களும் பிற வழிபாட்டுத்தலங்களும் சூறையாடப்பட்டுள்ளன.

இதற்கிடையில், கடந்த மே 4-ஆம் குக்கி-ஜோமி பழங்குடி வகுப்பைச் சேர்ந்த 2 பெண்களை, மனிதத் தன்மையற்ற வகையில் நிர்வாணமாக இழுத்துச் சென்றும், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டும், வல்லுறவுக்கு உள்ளாக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இது உலகளவில் இந்தியாவிற்கு பேரவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், மணிப்பூர் வன்முறையில், குக்கி சமூக மக்கள் 114 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மனநலம் பாதிக்கப்பட்ட குக்கியின பெண் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதாகவும் அம்மாநில குக்கி சமூகத்தை சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.