மகாராஷ்டிராவில் காவல் உதவி ஆய்வாளரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அரசு பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் சதாரா மாவட்டத்தில் உள்ள பால்தான் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 28 வயது மருத்துவர், நேற்று இரவு பால்தானில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார் சோதனை செய்தனர். அப்போது, கோபால் பதானே தன்னை 5 மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும், பிரசாந்த் பங்கர் என்ற நபர் மனரீதியான துன்புறுத்தல் செய்ததாகவும் அப்பெண் மருத்துவர் தனது உள்ளங்கையில் எழுதி தற்கொலை குறிப்பு வைத்திருந்தார்.
இதை தொடர்ந்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் கோபால் பதானே, தலைமறைவாகியுள்ளார். இச்சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
