states

img

பீகார் வாக்காளர் பட்டியல் - 65 லட்சம் பேர் நீக்கம்!

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பீகாரில் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் மாதத்திற்குள் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் ஜூலை 1-ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 23-ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளிட்டுள்ள அறிக்கையின்படி, 53 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களை நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அடுத்த 2 நாட்களில் மேலும் 12 லட்சம் வாக்காளர்ளை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இதன்மூலம் நீக்கம் செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 65.20 லட்சமாக உயர்ந்துள்ளது. 
தேர்தல் சமயத்தில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்படுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றது.