இஸ்ரேலுடன் பேச்சு; ஈரானுக்கு கண்டனம் படுகொலையாளர்களுடன் கைகோர்க்கும் மோடி
இனப்படுகொலைகள் செய்து கொண்டு போர்களை தூண்டி வரும் இஸ்ரேல் அரசுடன் பேசிய பிரதமர் மோடி, அமெரிக்காவால் தாக்குதலுக்கு உள்ளாகும் ஈரானை கண்டித்துள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவும் இடையே நடந்து வந்த அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை முடியும் கட்டத்தில் இருந்தது. ஈரானும் அமெ ரிக்காவின் சில நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டி ருந்த நிலையில் ஈரான் மீது அமெரிக்கா வும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தின. இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவின் ராணுவத் தலங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்கு ஆசியா முழுவதும் போர் பரவும் அபாயம் உரு வாகியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்கள் முன்பு பேசிய பிரதமர் மோடி மேற்கு ஆசிய நிலவரம் மிகுந்த கவலை அளிக்கிறது என கூறியுள்ளார். மேலும் அனைத்து மோதல்களையும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் தீர்ப்பதையே இந்தியா ஆத ரிக்கிறது. மேற்கு ஆசியாவில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அந்தந்த நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து பணியாற்றும். உலகளாவிய பதற்றங்களுக்கு மத்தியில் இந்தியா எப்போதும் அமைதியையே வலியு றுத்தி வந்துள்ளது. இரண்டு ஜனநாயக நாடுகள் ஒன்றி ணைந்து நிற்கும்போது, அமைதிக்கான குரல் இன்னும் வலிமை பெறுகிறது என இனப்படுகொலை செய்து வரும் இஸ்ரேலை ஜனநாயக நாடு எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட நாடான ஈரானுடன் உரையாடாமல் தாக்குதலை துவங்கிய இஸ்ரேலுடன் பேசியுள்ளார் மோடி. அதேபோல ஐக்கிய அரபு அமீர கத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பேசியுள்ளார். அமீரகத்தில் உள்ள அமெரிக்கா வின் ராணுவத்தலம் மீதும் தாக்குதல் நடத்தியது ஈரான். ஈரானின் இந்தப் பதிலடித் தாக்குதல்களை பிரதமர் மோடி கடுமையாகக் கண்டித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. பச்சிளம் குழந்தைகள் இருந்த பள்ளிக்கூடத்தின் மீது குண்டு வீசி படு கொலைகளை செய்த இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை கண்டிக்காத மோடி இந்தியாவின் நீண்டகால நட்பு நாடான ஈரானை கண்டித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்த லாம் என்ற சூழல் இருந்த நிலையிலும் மோடி இஸ்ரேல் சென்றார். மேலும் இனப்படுகொலையாளி என சர்வதேச நீதிமன்றத்தால் கைது வாரண்ட் பிறப் பிக்கப்பட்ட நேதன்யாகுவை கட்டிப் பிடித்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டார் மோடி. இது சர்வதேச அளவில் இந்தியா வின் வெளியுறவுக்கொள்கை மீதும் மோடி மீதும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.