அகமதாபாத் விமான விபத்து ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு
புதுதில்லி ஜூன் 12ஆம் தேதி குஜ ராத் மாநிலம் அகமதா பாத் விமான நிலையத் தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 விமானம், புறப் பட்ட சிறிது நேரத்திலேயே மருத் துவ விடுதி வளாகத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 240 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விமான விபத்து தொ டர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நியாயமான, விரைவான விசா ரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் விமானி அமித் சிங் தலைமையிலான “சேப்டி மேட்டர்ஸ் பவுண்டேஷன்” என்ற தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கோடீஸ்வர் சிங் அடங்கிய அமர்வு இரு தரப்பு வாதத்திற்கு பின்பு, “அகமதாபாத் விமான விபத்து தொடர்பான விமான விபத்து புலனாய்வு பணியகத்தின் முதற்கட்ட அறிக்கை, தேர்ந்தெ டுக்கப்பட்ட மற்றும் துண்டு துண் டான தகவல்களை மட்டுமே வெளியிட்டுள்ளது. இது ஒரு பொறுப்பற்ற நடவடிக்கை. விசாரணை முடியும் வரை முழுமையான ரகசியத்தை பேணுவது மிகவும் முக்கியம். இதுபோன்ற துயரங்கள், பெரும் பாலும் போட்டி விமான நிறுவ னங்களால் பணமாக்கப்படு கின்றன. நியாயமான, சார்பற்ற, விரைவான நிபுணர் குழு விசா ரணை தொடர்பாக ஒன்றிய அர சும், சிவில் விமானப் போக்கு வரத்து இயக்குநர் ஜெனரலும் பதிலளிக்க வேண்டும்” என நோட்டீஸ் அனுப்ப வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.