states

img

ரம்மி விளையாடிய அமைச்சருக்கு விளையாட்டுத் துறையாம்

ரம்மி விளையாடிய அமைச்சருக்கு விளையாட்டுத் துறையாம்

பாஜக அரசின்  நடவடிக்கையால் “கல கல”

மகாராஷ்டிராவில் பாஜக - சிவ சேனா (ஷிண்டே) - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னா விஸ் மற்றும் சிவ சேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆகியோர் துணை முதலமை ச்சராக உள்ளனர். மகாராஷ்டிரா அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக இருந்த மாணிக் கோகடே கடந்த சில நாட்களுக்கு முன்பாக சட்டமன்றக் கூட்டம் நடை பெற்ற போது தனது மொபைல் போனில் “ஜங்கிள் ரம்மி” விளையாடி சிக்கினார். இதுதொடர்பாக ஆதார வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. ஆனால் இதனை மறுத்த அமைச்சர் கோகடே வீடியோவை பரப்பியவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்போவ தாக எச்சரித்தார். இதனிடையே மாணிக் கோகடேவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ்,  சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத்) உள்ளிட்ட எதிர்கட்சி கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. ஆனால் அமைச்சர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என கோகடே திட்டவட்ட மாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், வேளாண்மை அமைச்சராகப் பணியாற்றி வந்த மாணிக்  கோகடே அந்த துறையில் இருந்து நீக்கப்பட்டு விளையாட்டு மற்றும் இளை ஞர் நலத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறி விப்பை  முதலமைச்சர் பட்னாவிஸ் அறி வித்துள்ளார். முன்னதாக விளையாட்டுத் துறை பொறுப்பு வகித்து வந்த தத்தத ராயா பார்வே வேளாண் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.  சட்டமன்றத்தில் ரம்மி விளையாடிய அமைச்சருக்கு விளையாட்டுத்துறை வழங்கிய பாஜக முதலமைச்சர் பட்னா விஸின் நடவடிக்கை நகைப்பை ஏற்படு த்தியுள்ளது. குறிப்பாக பாஜக அரசின் செயல்பாடு சமூகவலைதளத்தில் மீம்ஸ்களாக  கிண்டலடிக்கப்பட்டு வரு கிறது என்பது குறிப்பிடத்தக்கது.