states

img

பாஜக ஆளும் அசாம் முதலமைச்சரை விமர்சித்ததால் அடாவடி அதானிக்கு நிலம் ஒதுக்கியதை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் மீது தேசத்துரோக வழக்கு

பாஜக ஆளும் அசாம் முதலமைச்சரை விமர்சித்ததால் அடாவடி

அதானிக்கு நிலம் ஒதுக்கியதை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் மீது தேசத்துரோக வழக்கு

கவுகாத்தி வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது. முதலமைச்சராக ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளார். இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பகுதியில் இந்திய ராணுவம் “ஆபரேசன் சிந்தூர்” என்ற பெய ரில் பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்கு தல் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள், குழப்பங்கள் நீடித்து வருகின்றன. அதாவது ஆபரேசன் சிந்தூர் தொடர்பான உண்மைத் தன்மை பற்றி பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. ஆனால் இதுதொடர்பாக மோடி அரசு உறுதி யான எவ்வித தகவலும் அளிக்கவில்லை.  சிஎன்என் உள்ளிட்ட சர்வதேச ஊடகங் களின் மேற்கோள்படி, “தி வயர்” இணைய இதழ் ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக கட்டுரை ஒன்றை வெளியிட்டது. இந்த கட்டுரையால் அதிர்ச்சி அடைந்த மோடி அரசு, “தி வயர்” இணைய இதழை முடக்கியது. கட்டுரை நீக்கப்பட்ட பின்பு “தி வயர்” இதழ் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து செவ்வாய்க்கிழமை அன்று “ஆபரே சன் சிந்தூர்” கட்டுரைக்காக “தி வயர்” இணைய இதழின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், மூத்த ஊடகவியலாளர் கரண் தாப்பர் மீது தேசத் துரோக வழக்கு பிரிவின் (பிஎஸ்எஸ் 152) கீழ்  பதிவு செய்து பாஜக ஆளும் அசாம் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அசாம்  பாஜக அரசின் இந்த அடாவடிக்கு காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி கட்சிகள், ஊடகவியலாளர்கள், முன்னாள் நீதிபதிகள் உட்பட நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அதானி நிறுவனத்துக்கு 8 கோடி சதுர அடி நிலம் இந்நிலையில், அசாமில் மீண்டும் ஒரு பத்தி ரிகையாளர் மீது அம்மாநில பாஜக அரசு தேசத் துரோக பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள் ளது. அசாம் மாநிலம் திமா ஹசாவோ மாவட்டத் தில் பழங்குடியினரின் 3,000 பிகா (8.10 கோடி சதுர அடி) நிலத்தை அதானியின் சிமெண்ட் ஆலை (மகாபால் சிமெண்ட்ஸ்) நிறுவனத்துக்கு அம்மாநில அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கவுகாத்தி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் மேதி,”3,000 பிகாக்கள் என்பது ஒரு முழு மாவட்டம். என்ன நடக்கிறது அங்கு? ஒரு தனியார் நிறுவனத்துக்கு 3,000  பிகாக்கள் வழங்கப்படுகிறதா? தரிசு நிலம் என் றாலும், 3,000 பிகாக்கள் கொடுக்கப்படுவதா? இது என்ன மாதிரியான முடிவு? இது என்ன நகைச்சுவையா? தனியார் நலன் அல்ல, பொது நலனே முக்கியம்” என கடும் கண்டனம் தெரி வித்தார். கவுகாத்தி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் மேதி கண்டனம் தெரிவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலா னது. இதனை குறிப்பிட்டு அசாம் மாநிலத்தின் மூத்த பத்திரிகையாளர் அபிசார் சர்மா தனது  யூடியூப் சேனலில் ஆகஸ்ட் 18 அன்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில்,”அசாம் முத லமைச்சர் (ஹிமந்தா பிஸ்வா சர்மா) விஷத்தைப் பரப்பும் நோக்கத்தில் இந்து-முஸ்லிம் பற்றி அதிகம் பேசுகிறார். ஆனால் பழங்குடியினரின் நிலம் பறிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்பு கிறார்” என விமர்சித்தார்.  இதனை தொடர்ந்து கவுகாத்தியைச் சேர்ந்த அலோக் பருவா என்ற பாஜக ஆதரவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பத்திரிகை யாளர் அபிசார் சர்மா மீது பிஎஸ்எஸ் 152இன் கீழ் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்துள் ளது கவுகாத்தி காவல்துறை. பத்திரிகை யாளரை ஒடுக்கும் நோக்கத்துடன் செயல்படும் அசாம் பாஜக அரசின் இந்த அடாவடிக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சட்டப்பூர்வமாக பதிலளிப்பேன் : அபிசார் சர்மா இதுதொடர்பாக பத்திரிகையாளர் அபிசார் சர்மா தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “எனக்கு எதிராக அசாம் காவல்துறை பதிவு செய்துள்ள வழக்குப் பதிவு முற்றிலும் அடிப்படையற்றது. இதற்கு சட்டப்பூர்வமாக பதிலளிக்கப்படும். எனது நிகழ்ச்சியில் அசாம் நீதிபதியின் அறிக்கையை நான் குறிப்பிட் டேன். அதில் மகாபால் சிமெண்ட் நிறுவனத் திற்கு அசாம் அரசு 3,000 பிகா நிலம் கொடுத்த தாக குறிப்பிட்டு நீதிபதி அதை விமர்சித்தார். அதனை குறிப்பிட்டு முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மாவின் சமூக அரசியல், அவரது சொந்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு உண்மைகளுடன் எடுத்துக்காட்டி னேன். இதில் என்ன தவறு” என அவர் கூறியுள்ளார்.