states

img

மீண்டும் பயன்பாட்டில் ராய்ட்டர்ஸ், சீனாவின் குளோபல் டைம்ஸ், துருக்கியின் டிஆர்டி வேர்ல்டு

மீண்டும் பயன்பாட்டில் ராய்ட்டர்ஸ், சீனாவின் குளோபல் டைம்ஸ், துருக்கியின் டிஆர்டி வேர்ல்டு

கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய மோடி அரசு


புதுதில்லி சர்வதேச அளவில் புகழ் பெற்ற செய்தி நிறுவன மாக இருப்பது ராய்ட்டர்ஸ்  ஆகும். ஜூலை 5 இரவு முதல் இந்தியாவில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் டுவிட்டர் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது. ராய்ட்டர்ஸ் மட்டுமின்றி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மை செய்தித்தாளான பீப்பிள்ஸ் டெய்லியின் கீழ் செயல்படும்  குளோபல் டைம்ஸ், துருக்கி நாட்டின் அரசு பொது ஊடக மான டிஆர்டி வேர்ல்டு ஆகிய செய்தி தளங்களின் டுவிட்டர் எக்ஸ் பக்கங்களும் முடக்கப் பட்டன. எந்த அறிவிப்பும் இல்லா மல், திடீரென ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்க ளின் டுவிட்டர் எக்ஸ் தளங்கள் முடக்கப்பட்டதற்கு உலகம் முழு வதும் கடும் கண்டனங்கள் குவிந்தன. இந்த கண்டனத்தால் மிரண்ட மோடி அரசு அமைச்சகம் மூலம் பதில் அளிக்காமல், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஒருவர் மூலம் அறிக்கை வெளியிட்டது. அதில்,“ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது ராய்ட் டர்ஸ் உள்பட பல்வேறு டுவிட்டர் எக்ஸ் கணக்குகளை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்தி டம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போதைய கோரிக்கையின் காரணமாக இப்போது முடக்கப் பட்டிருக்கலாம். டுவிட்டர் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சரி செய்வதற்கான பணி மேற் கொள்ளப்பட்டு வருகிறது” என அவர் மழுப்பலாகக் கூறினார். இத்தகைய சூழலில், திங்க ளன்று ராய்ட்டர்ஸ், சீனாவின் குளோபல் டைம்ஸ், துருக்கியின் டிஆர்டி வேர்ல்டு உள்ளிட்ட செய்தி தளங்களின் டுவிட்டர் எக்ஸ் பக்கங்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன. தங்க ளது செய்தி தளங்கள் முடக்கப் பட்டாலும் ராய்ட்டர்ஸ், சீனாவின் குளோபல் டைம்ஸ், துருக்கியின் டிஆர்டி வேர்ல்டு உள்ளிட்ட செய்தி நிறுவனங்களும் கண்ட னம் தெரிவித்து அறிக்கை வெளி யிடவில்லை. மீண்டும் செயல் பாட்டிற்கு கொண்டு வரக்கோரி கோரிக்கையும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘இந்தியாவை கேலிக்குரிய நாடாக மோடி உருவாக்குகிறார்’

ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களின் டுவிட்டர் எக்ஸ் தளங்கள் முடக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் சுப்ரியா தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,” இந்தியாவில் ராய்ட்டர்ஸ் கணக்கு ஏன் முடக்கப்பட்டது? அவர்கள் என்ன செய்தார்கள்? நற்பெயர் பெற்ற செய்தி நிறுவனங்களைத் தடை செய்வது என்ன மாதிரியான ஜனநாயகம்? ஏன் ஒவ்வொரு எதிர்ப்புக் குரலையும், ஒவ்வொரு கேள்வியையும் நசுக்க வேண்டும்? மோடி அரசாங்கம் ஏன் இந்தியாவை உலகிற்கு முன் ஒரு கேலிப் பொருளாக மாற்றுகிறது?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.