states

img

எங்கள் பள்ளிக்கு ஆசிரியர்கள் வேண்டும் ஜக ஆளும் அருணாச்சலில் இரவு முழுவதும் 65 கி.மீ., பேரணி சென்ற மாணவிகள்

எங்கள் பள்ளிக்கு ஆசிரியர்கள் வேண்டும்  ஜக ஆளும் அருணாச்சலில் இரவு முழுவதும் 65 கி.மீ., பேரணி சென்ற மாணவிகள்

இடாநகர் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முத லமைச்சராக பெமா காண்டு உள் ளார். பெமா காண்டு தனது குடும் பம் மற்றும் உறவினர்களுக்கு அரசு ஒப்பந்தம் வழங்குவது, பிரதமர் மோடியின் நண்பர் அதானிக்கு எந்த மலையை (கனிமத்திற்காக) தாரை வார்ப்பது என யோசிப்பது தான் முதன்மையான பணி. ஆனால் மக்கள் நலன், கல்வி போன்றவை தொடர்பாக அருணாச் சலப் பிரதேச பாஜக அரசுக்கு அக்க றையில்லை. இந்நிலையில், அருணாச்சலின் பக்கே கெசாங் மாவட்டத்தில் அமை ந்துள்ள நங்னியோ கிராமத்தில் உள்ள பள்ளிக்கு ஆசிரியர் நிய மிக்க வலியுறுத்தி மாணவிகள் 65 கி.மீ., பேரணி சென்றுள்ளனர். நங்னியோ கிராமத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யா லயா (கேஜிபிவி - ஒன்றிய அரசுக்கு சொந்தமான மகளிர் கல்வி நிறு வனம்) பள்ளியில் 100க்கும் மேற் பட்ட மாணவிகள் பயில்கின்றனர். பள்ளியில் பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந் தும் போதுமான ஆசிரியர்கள் இல்லை. ஆசிரியர்களை நியமிக்க அரசிடம் கோரிக்கை வைத்தும் எந்த பலனுமில்லை. இதனால் கேஜிபிவி பள்ளி யைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட மாணவிகள், தங்கள் பள்ளியில் ஆசிரியர்களை உடனடியாக நிய மிக்கக் கோரி கிட்டத்தட்ட 65 கி.மீ. பேரணி நடத்தினர். நீல நிற பள்ளி  சீருடை, பள்ளிப்பாட புத்தகங்கள் அடங்கிய பைகள் மற்றும் பதாகை களுடன் மாணவிகள் ஞாயிற்றுக் கிழமை மாலை நங்னியோ கிரா மத்தில் இருந்து தங்கள் பேர ணியை தொடங்கி, திங்கட்கிழமை காலை மாவட்ட தலைமையகமான லெம்மியை அடைந்தனர். இரவு முழுவதும் தீப்பந்தங்களுடன் மாணவிகள் பேரணியாய் நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. மாணவிகளின் பெற் றோர்களும் இந்த போராட்டத்தி ற்கு ஆதரவு அளித்து உடன் சென்றனர்.

12 மணிநேரத்தில் 65 கி.மீ.,  வரலாற்றுச் சிறப்புமிக்கப் போராட்டம்

பேரணியாக சென்ற 90க்கும் மேற்பட்ட மாணவிகள் அனைவரும் 16 வயதிற்குட்பட்ட சிறுமிகள் ஆவர்.  ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் கடினமான பாறை உள்ள வன வழித்தடம் மற்றும் வன விலங்கு அபாயம் உள்ள சாலைப்பகுதிகளை கடந்து மாணவி கள் மாவட்ட தலைமையகமான லெம்மிக்கு சென்றுள்ளனர். குறிப்பாக இடைவிடாது 12 மணிநேர பயணம் மேற்கொண்டு 65 கி.மீ., தூரத்தை ஒரே இரவில் கடந்து வரலாறு படைத் துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.