இந்தியாவை அவமதிக்கும் டிரம்ப் உடன் குற்றவுணர்வு இன்றி கைகோர்க்கும் மோடி
புதுதில்லி இந்தியாவை தொடர்ந்து அவமதித்தும் மிரட்டியும் வரும் டிரம்ப்புடன் பிரதமர் மோடி மீண்டும் வர்த்தகப் பேச்சு வார்த்தையை துவங்க உள்ளார். இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தை தொ டர்வதாகவும், பிரதமர் மோடி யுடன் பேசுவதை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அதற்கு பிரதமர் நரேந்திர மோடியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்தியா- பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என டிரம்ப் சுமார் 40 க்கும் மேற் பட்ட முறை கூறியுள்ளார். இதற்கு பிரதமர் மோடியோ அல்லது இந்திய தரப்பில் இருந்தோ எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதேபோல ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என அபராத வரி 25 சதவீதம் இந்தியா மீது விதித்தார்.இதனால் தமிழ் நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் தொழில் துறையும், ஏற்றுமதியாளர்களும் கடும் பாதிப்புகளை எதிர் கொண்டுள்ளனர். ஆனால் இதற்காக இந்தியத் தரப்பில் எந்த விதமான கண்டனமும் தெரி விக்கப்படவில்லை. இதுமட்டுமின்றி டிரம்ப் பதவி ஏற்ற பிறகு மோடி அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது இந்தி யர்களை கைகள் மற்றும் கால்க ளில் விலங்கிட்டு டிரம்ப் நாடு கடத்தினார். இவ்வாறு சர்வதேச அளவில் இந்தியாவை டிரம்ப் அவமதித்த போதும் எந்த எதிர் வினையையும் மோடி தெரிவிக்க வில்லை. இந்நிலையில் டிரம்ப் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் “இந்தியா – அமெரிக்காவுக்கு இடையேயான வர்த்தகத் தடை களை நீக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்பதை அறி விப்பதில் நான் மகிழ்ச்சி கொள்கி றேன். வரும் வாரங்களில் எனது நல்ல நண்பரான மோடியுடன் பேசுவதை நான் எதிர்நோக்கி யுள்ளேன். இரு பெரிய நாடுக ளுக்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தை யில் தீர்வு எட்டப்படுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு பதில ளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவும் - அமெ ரிக்காவும் இயல்பான கூட்டாளி கள். நெருங்கிய நட்பு நாடுகள். நமது வர்த்தகப் பேச்சுவார்த்தை நமது இரு நாடுகளுக்கும் இடை யேயான எல்லையற்ற திறன்களை கண்டுபிடிப்பதற்கு மிகுந்த உதவி யாக இருக்கும் என்று நம்புகிறேன். டிரம்ப்புடன் பேசுவதை நானும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளேன். இரண்டு நாட்டு மக்களுக்கும் வளமான, பிரகாசமான எதிர் காலத்தை அமைத்துக் கொடுக்க நாம் உழைப்போம்.” என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்தியாவை சர்வதேச அளவில் அவமானப் படுத்தி வந்த டிரம்பிற்கும் அவ ரது நிர்வாகத்திற்கும் எந்த விதமான முறையான எதிர்ப்பை யும் கண்டனத்தையும் தெரி விக்காத குற்ற உணர்வே இன்றி டிரம்ப்புடன் மோடி மீண்டும் கைகோர்க்க உள்ளார். இது மோடி யின் கார்ப்பரேட் நண்பர்களின் நன்மைக்காக எடுக்கப்பட்ட முடிவு என கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.