states

img

பாலியல் குற்றச்சாட்டு பதவியை ராஜினாமா செய்த கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர்

பாலியல் குற்றச்சாட்டு பதவியை ராஜினாமா செய்த கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் 

கேரள இளைஞர் காங்கிரஸ் தலை வராக ராகுல் மம்கூட்டத்தில் உள்ளார். இவர் பாலக்காடு சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ-வும் கூட. இந்நிலையில், ராகுல் மம்கூட்டத்தில் மீது நடிகையும், பத்திரிகையாளருமான ரினி ஆன் ஜார்ஜ் பாலியல் குற்றம் சுமத்தினார். இதுதொடர்பாக ரினி செய்தி யாளர்களிடம் மேலும் கூறுகையில், “நான் யாரையும் தனிப்பட்ட முறை யில் குறிப்பிடவோ அல்லது இயக்கத்தின் பெயரைக் குறிப்பிடவோ விரும்ப வில்லை. எனது போராட்டம் எந்த தனி நபர்களுக்கும் எதிரானது அல்ல. ஆனால் சமூகத்தில் உள்ள தவறான போக்குக ளுக்கு எதிரானது. ஒரு அரசியல் தலை வர் எப்படி இருக்க வேண்டும் என்பது தான் எனது ஒரே பிரச்சனை” என அவர் கூறினார். அதே நேரத்தில் வேறு சில பெண்க ளும் ராகுலுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த சமூக ஊடக பதிவுகளும், குரல் பதிவுகளும் வெளியாகின. ராகுல் மம்கூட்டத்தில் ஒரு பெண்ணை கர்ப்பிணி யாக்கி வயிற்றில் உள்ள சிசுவை கலைக்கத் தூண்டும் குரல் பதிவும் வெளி யாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். எம்எல்ஏ பதவியையும்  ராஜினாமா செய்க ராகுல் மம்கூட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்தால் மட்டும் போதாது. அவர் சட்டமன்ற உறுப்பி னர் பதவியையும் ராஜினாமா செய்து பெண் சமூகத்திடம் மன்னிப்பு கோர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் இ.பி.ஜெயராஜன் வலியுறுத்தியுள்ளார்.