கண்ணூர் பல்கலைக்கழகம் மீண்டும் சிவந்தது தொடர்ச்சியாக 26ஆவது முறையாக எஸ்எப்ஐ வெற்றி
கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக் கழக மாணவர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) மகத்தான வெற்றியைப் பெற்றுள் ளது. 5 பொது இடங்களையும் எஸ்எப்ஐ வென் றது. குறிப்பாக கண்ணூர் பல்கலைக்கழகத்தில் எஸ்எப்ஐ தொடர்ச்சியாக 26ஆவது முறையாக வெற்றி பெற்று, வரலாறும் படைத்துள்ளது. எஸ்எப்ஐயின் நந்தஜ் பாபு தலைவராகவும், கவிதா கிருஷ்ணன் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, தேர்தலின் போது யுடிஎஸ்எப் பரவலான வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. கேஎஸ்யு- எம்எஸ்எப் தேர்தலில் மோசடி செய்ய முயன்றது குறித்து எஸ்எப்ஐ தொண்டர்கள் கேள்வி எழுப்பியபோது, வெளிநபர் தலைமை யிலான ஒரு குழு வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. கேஎஸ்யு- எம்எஸ்எப் தொண்டர்கள் வாக்குச் சீட்டுகளை திருடினர். கொடிய ஆயு தங்களை ஏந்திய கேஎஸ்யு- எம்எஸ்எப் தொண்டர்கள் வளாகத்திற்குள் நுழைந்தனர். எனினும் காவல்துறை தடியடியால் வன்முறை வெடிக்காமல் கட்டுக்குள் கொண்டு வரப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.