states

img

கேரள அரசு செய்யும் அனைத்தையும் எதிர்ப்பது சரியல்ல! ஐயப்ப சங்கமத்தை எதிர்ப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்

கேரள அரசு செய்யும் அனைத்தையும் எதிர்ப்பது சரியல்ல! ஐயப்ப சங்கமத்தை எதிர்ப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்

சங்பரிவார் கும்பலுக்கு வெள்ளப்பள்ளி நடேசன் எச்சரிக்கை

ஆலப்புழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை மையிலான இடது ஜனநாயக முன்னணி ஆளும் கேரள மாநில அரசும்,  திருவிதாங்கூர் தேவசம்போர்டு இணை ந்து செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் (செப்., 20) “உலகளாவிய ஐயப்ப சங்கமம்” மாநாட்டை நடத்துகிறது. பத்தனம்திட்டா மாவட்டம்  பம்பாவில் (சபரிமலை அடிவாரம்) நடைபெறும் இந்த மாநாட்டில் 3,000 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என கேரள தேவசம்போர்டு அமைச்சர் வி.என். வாசவன் தெரிவித்தார். ஆனால் இந்த மாநாட்டை சீர்குலைக்க நோக் கத்தில் ஆர்எஸ்எஸ் - பாஜக சங் பரிவார் கும்பல்,”நாங்கள் மட்டும் தான் இந்து மதம். உல களாவிய ஐயப்ப சங்கமம் வெற்று நாடகம்” என வெறுப்புப் பேச்சை கக்கி வருகிறது. இந்நிலையில், அரசியல் என்ற பெயரில் அரசு செய்யும் அனைத்தையும் எதிர்ப்பது சரியல்ல என்றும், ஐயப்ப சங்கமத்தை எதிர்ப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என சங்பரிவார் கும்பலுக்கு ஸ்ரீ நாராயண தர்ம  பரிபாலன யோகம் (எஸ்என்டிபி) சங்க பொ துச்செயலாளர் வெள்ளப்பள்ளி நடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐயப்ப சங்கம மாநாட்டிற்கு அழைக்க வந்தி ருந்த தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிர சாந்தை சந்தித்த பிறகு ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், “உலகளாவிய ஐயப்ப சங்கமம் கேரளாவுக்கு மட்டுமல்ல, இந்த பிரம்மாண்டமான சங்கமம் இந்தியாவிற்கும் பயனளிக்கும் ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்கும். இந்த சங்கமம் சபரிமலை யின் வளர்ச்சியையும் புகழையும் அதி கரிக்கும். எந்த புகாரும் இல்லாத வகையில் அரசாங்கமும் தேவசம் போர்டும் சபரிம லைக்கான வளர்ச்சித் திட்டங்களை எடுத்துச் செல்கின்றன. அதனால் உலகளாவிய ஐயப்ப சங்கமம் கேரள மக்களால் உற்சாகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.  ஆனால் இதனை எதிர்ப்பவர்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள். இதற்கு மாற்று சங்கமம் என்ற கூற்று சரியல்ல. கட்சி, அரசியல், மதம், சாதி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனை வரும் ஒன்றாக நிற்க வேண்டும். அரசியல் என்ற பெயரில் அரசு செய்யும் அனைத்தை யும் எதிர்ப்பது சரியல்ல. சபரிமலையை விவா தத்துக்குரிய இடமாக மாற்றுவது நல்லதல்ல. அது கேரளாவிற்கும் சபரிமலைக்கும் செய்யும் அநீதி. ஐயப்ப சங்கமத்தை எதிர்ப்பவர்களின் நிலைப்பாடு அர்த்தமற்றது. அதன் பெயரில் அரசை குத்த முயற்சிப்பவர்கள் இறுதியில் தங்களைத் தாங்களே குத்திக் கொள்வார்கள்” என அவர் எச்சரிக்கை விடுத்துளளார்.