டிராய் மூலம் தடைவிதிக்கும் அமித் ஷா அமைச்சகம் மகாராஷ்டிரா தேர்தல் முறைகேட்டை ஒப்புக்கொள்கிறதா மோடி அரசு?
மும்பை பாஜக - தேர்தல் ஆணையகள்ளக் கூட்டணியின் “வாக்குத் திருட்டு” நாட்டின் மிக முக்கிய விவாதப் பொருளாக உரு வெடுத்துள்ளது. ஒவ்வொரு நாளும் வாக்குத் திருட்டு தொடர்பாக ஆதாரங்களுடன் செய்தி கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிராவில் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு வாக்குகள் திருடப்பட்டது என்பது குறித்த ஆவணப்படத்தை காங்கிரஸ் கட்சி தயாரித்துள்ளது. இதுதொடர்பான இணைப்பைத் தனது கட்சித் தொண்டர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப காங்கிரஸ் கட்சி, இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் (டிராய்) விண்ணப்பித் திருந்தது. ஆனால், இது போராட்டத்தை தூண்டும் எனக் கூறி, எஸ்எம்எஸ்களை அனுப்ப டிராய் அமைப்பு அனுமதி மறுத்துவிட்டது. டிராயின் இந்த முடிவுக்குக் கடும் கண்ட னம் தெரிவித்துள்ள காங்கிரஸ்” வாக்குத் திருட்டை மறைப்பதற்காக ஒன்றிய உள் துறை அமைச்சகம், தேர்தல் ஆணையம் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுகிறது” என குற்றம் சாட்டியுள்ளது. மேலும், “டிராய் அமைப்பு பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு போலச் செயல் படுகிறது. ஒரு யூடியூப் இணைப்புக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏன் இவ்வளவு அஞ்ச வேண்டும்” என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிரா தேர்தல் முறை கேட்டை ஒப்புக்கொண்டு மோடி அரசு டிராய் மூலம் வாக்குத் திருட்டு ஆவணப்படத்திற்கு தடை விதித்துள்ளதா? என்ற சந்தேகம் கிளம்பி யுள்ளது.