இனவெறியர்களால் இங்கிலாந்தில் இந்திய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை
இந்தியத் தொழிலாளர்கள் சங்கம் கடும் கண்டனம் இனவெறி பாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு
இங்கிலாந்தில் இந்தியாவைச் சேர்ந்த சீக்கிய பெண்மணி ஒருவரை அந்நாட்டின் வெள்ளை இனவெறியர்கள் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்தும் இனவெறி மற்றும் பாசிசத்திற்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்றிணைய அழைப்பு விடுத்தும் இந்தியத் தொழிலாளர்கள் சங்கம் (Indian Workers’ Association) அறிக்கை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்காம் பகுதியில் உள்ள ஓல்ட்பரியில், டேம் சாலைக்கு அருகே பட்டப்பகலில் இரண்டு வெள்ளை இனத்தைச் சேர்ந்த இனவெறியர்கள் செப் 9, அன்று இந்திய பெண்மணியை பாலியல் வன்கொடுமை செய்த னர். இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடமும் இங்கிலாந்தில் வாழும் இந்தியர்களிடமும் அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தி யுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் இந்தியத் தொழிலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த சம்ப வத்தை கடுமையாகக் கண்டித்துள்ளது. அவ் வறிக்கையில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது: இது, ஆளும் அரசியல்வாதிகளால் வேண்டு மென்றே உருவாக்கப்பட்ட, இனவெறி பேச்சுக்க ளாக உருவாக்கப்பட்ட விரோதத்தின் விளைவு. குற்றவாளிகளின் மிரட்டலானது இங்கி லாந்தின் “ரிஃபார்ம் கட்சி” உள்ளிட்ட தீவிர வலதுசாரி சக்திகளின் கருத்துக்களைத்தான் பிரதி பலிக்கின்றன. அகதிகள் மற்றும் புலம்பெயர்ந் தோர் பற்றி விசத்தை கக்கும் அரசியல்வாதி களின் வெறுப்புப் பேச்சுகளே இத்தகைய கொ டூரமான தாக்குதல்களுக்குக் காரணமாகின்றன. பிரதமர் ரிஷி சுனக் “பிரிட்டன் தீவு முழுக்க அந்நியர்கள்” குடியேறியுள்ளனர், அவர்களை “தடுப்புச் சிறைகளில் வைத்து, நாடு கடத்து வோம்” என பேசினார். அத்துடன் இனவெறியர்க ளால் முன்வைக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப் பட்டு வரும் “மறு குடியேற்றம்” (re-emigra tion) என்ற புதிய முழக்கங்கள், அரை நூற்றா ண்டுக்கும் மேலாக பிரிட்டனில் வாழ்ந்து வருகிற புலம்பெயர்ந்த மக்களின் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. ஈப்பிங் நகரில் அகதி ஒருவரால் பள்ளி மாணவி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப் பட்டதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்திக ளும் அதனைத் தொடர்ந்து வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் குடியேற்றம் குறித்து நடத்தப்படும் விவாதங்களும் இங்கிலாந்தில் உள்ள புலம்பெயர் மக்கள் மத்தியில் பதற் றத்தை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. இப்போதைய அவசரத் தேவை இத்தகைய சூழலில் பாதிக்கப்பட்ட பெண் ணுக்கு ஆதரவாக இருக்கிறோம். குற்றவா ளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். பர்மிங்காம் மக்களுக்கும், இனவெறி, துன் புறுத்தல் மற்றும் வன்முறையை எதிர்கொள் ளும் அனைத்துப் புலம்பெயர்ந்த சமூகங்க ளுக்கும் இந்தியத் தொழிலாளர்கள் சங்கமானது தோள்கொடுத்து நிற்கிறது என தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த பயங்கரமான சம்பவமானது லண்டனில் நடைபெறவிருக்கும் தீவிர வலது சாரியான டாமி ராபின்சனின் பேரணியில் தவறான வழிகாட்டுதலால் கலந்துகொள்ள திட்ட மிட்டுள்ள நமது சமூகத்தைச் சேர்ந்தவர்க ளுக்கும் ஒரு தெளிவான எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இனவெறியின் கடுமையான எதார்த்த நிலையைப் புரிந்துகொள்ள, தெளி வான சிந்தனையும், விழிப்புணர்வும் இப்போ தும் அவசியமாகிறது. இனவெறி மற்றும் பாசிசத்தின் சவால் களை எதிர்கொள்ள ஒரு வலுவான இயக்கத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்குவோம். எந்தவித பாரபட்சமும் இல்லாத உழைக்கும் வர்க்க ஒற்றுமையே இப்போதைய அவசரத் தேவை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், பாதிக்கப் பட்ட சமூகத்திற்கும், இனவெறி மற்றும் பாசி சத்தை எதிர்க்கும் அனைவருக்கும் இந்தியத் தொழிலாளர்கள் சங்க அமைப்பு தனது ஆதரவை வெளிப்படுத்துகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
