states

img

“பீகார் சட்டமன்ற தேர்தல் நியாயமாக நடைபெறுமா?”

“பீகார் சட்டமன்ற தேர்தல் நியாயமாக நடைபெறுமா?”

243 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் 22ஆம் தேதிக்குள் சட்டமன்ற தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்ற சூழல் உள்ளது. அக்., முதல் வார க ணக்கீட்டின் படி பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு சரி யாக ஒன்றரை மாதம் தான் உள்ள நிலை யில், தேர்தல் ஏற்பாடு பணிகள் தொடர் பாக இந்திய தலைமை தேர்தல் ஆணை யர் ஞானேஷ் குமார், ஆணையர்கள் விவேக் ஜோஷி, சுக்பிர் சிங் சந்து ஆகி யோர் சனிக்கிழமை அன்று ஆய்வை தொடங்கினர்.  2 நாள் ஆய்வின் முக்கிய அம்ச மாக ஞாயிறன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலை வரும், பீகார் எதிர்க்கட்சித் தலைவரு மான தேஜஸ்வி பேசுகையில்,”எங்கள் கட்சி பிரதிநிதிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்து வந்துள்ளனர். இந்த முறை பீகாரில் தேர்தல் நியாயமாக நடை பெறுமா? என்ற சந்தேகம் உள்ளது. எனினும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருப்பதால் தேர்தல் நியாய மாக நடைபெறும் என்று நாங்கள் நம்பு கிறோம். எவருக்கும் உதவி செய்யும் பொருட்டு தேர்தல் நடைபெறக் கூடாது” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.