states

img

பஞ்சாப்பில் நீடிக்கும் கனமழை 3,00,000 ஏக்கர் விவசாயப் பயிர்கள் நாசம் 29 பேர் பலி; வெள்ளத்தில் தவிக்கும் 16 மாவட்டங்கள்

பஞ்சாப்பில் நீடிக்கும் கனமழை 3,00,000 ஏக்கர் விவசாயப் பயிர்கள் நாசம் 29 பேர் பலி; வெள்ளத்தில் தவிக்கும் 16 மாவட்டங்கள்

சண்டிகர் 5 பெரிய நதிகள் (சட்லெஜ், பியாஸ், ராவி, ஜீலம், செனாப்) பாயும் பூமி பஞ்சாப் ஆகும். இந்த பஞ்சாப் மாநிலம் கடந்த 15 நாட்கள் அதீத மற்றும் தொடர்ச்சியான கனமழை  காரணமாக வெள்ளத்தில் சிக்கி உருக்குலைந் துள்ளது. வெள்ளத்திற்கு பஞ்சாப் மாநிலத்தின் கனமழை ஒரு காரணம் என்றாலும், இமய மலைச்சாரலில் உள்ள மாநிலங்களில் பெய்த கனமழையே மிக முக்கியக் காரணம் ஆகும். இமாச்சல் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் வெளுத்து வாங்கிய கனமழையால் ராவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் நதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. இதனால் பஞ்சாப் மாநிலத்தின் 3 நதிகளின் கரையோர மாவட் டங்கள் என 16 மாவட்டங்கள் வெள்ளக் காடாய் காட்சி அளிக்கின்றன. இதில் குரு தாஸ்பூர், அமிர்தசரஸ், தரன் தரன், பதான்கோட், கபுர்தலா, பெரோஸ்பூர், பாசில்கா, ஹோஷி யார்பூர் மற்றும் காகர் நதிக்கு அருகிலுள்ள மான்சா மற்றும் பாட்டியாலாவின் சில பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கனமழை வெள்ளத்தில் சிக்கி இது வரை 29 பேர் பலியாகியுள்ளனர். பலரை காண வில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. 50,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநில அரசால் 77 நிவாரண முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன. அதில் 4,729 பேர் தங்கியுள்ளனர். மீதமுள்ளவர்கள் பள்ளி, கல்லூரிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 3 லட்சம் ஏக்கர் குறிப்பாக மாநிலம் முழுவதும் 3 லட்சம் ஏக்கருக்கு அதிகமான அளவிலான விவசாயப் பயிர்கள் (நெல், கோதுமை) கனமழை வெள்ளத்தால் குளங்களாக மாறிவிட்டன. பல நூறு டிராக்டர்கள் மழைநீரில் சிக்கி இயந்திர கோளாறு மற்றும் வேறு இடத்திற்கு அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளன. வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள குருதாஸ்பூர் மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் வேளாண் துறை இயக்குநர் ஜஸ் வந்த் சிங் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இத்தகைய சூழலில் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் 3 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளார். விவசாயிகள் கண்ணீர் ஒரு மாதத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த தங்கள் நெல் பயிர்கள் வெள்ளத்தில் நாச மாகிவிட்டதாக விவசாயிகள் கண்ணீருடன் “தி வயர்” செய்தி தளத்திற்கு பேட்டி அளித்துள்ள னர்.  தற்போதைய சூழ்நிலையில், வெள்ளம் வடிய 10 நாட்கள் ஆகும் என்பதால் பயிர்கள் அழுகிப் போய்விடும் என வேளாண் வல்லு நர்கள் கூறியுள்ளனர். 37 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் மாநிலம் கடைசியாக 1988ஆம் ஆண்டு அதீத கனமழை காரணமாக வெள் ளத்தில் தத்தளித்தது. 12,989 கிராமங்களில் சுமார் 9,000 கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டன. இவற்றில், சுமார் 2,500 கிராமங்கள் முற்றி லுமாக நீரில் மூழ்கி, கடுமையான உயிர் இழப்பு களையும், சொத்துக்களையும் இழந்தன. அரசாங்க பதிவுகளின்படி, இந்த வெள்ளத்தில் 1,500 பேர் உயிரிழந்துள்ளனர்; 500 பேர் காணாமல் போயினர். அதன்பிறகு தற்போது 37 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் உருக்குலைந்துள்ளது. 14 லட்சம் கன அடி பஞ்சாப் மாநிலத்தின் இந்த நிலைமைக்கு ராவி நதி தான் காரணம் ஆகும். அந்த நதி யில் திங்களன்று வரை 14.11 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. பியாஸ், சட்லெஜ் நதி கரையோர மாவட்டங்களை விட ராவி நதி  கரையோர மாவட்டங்கள் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. அதே போல 1988ஆம் ஆண்டு கனமழை சேதத்துக்கு ராவி நதியில் இருந்து 11.20 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப் பட்டதே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.