மிரட்டும் தோல்வி பயம் பீகாரில் “இந்தியா” கூட்டணி தலைவர்களை சாதிரீதியாக அவதூறு செய்யும் பாஜக
காரில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டும், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டை கண்டித்தும் மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்ட்ரிய ஜனதாதள தலை வர் தேஜஸ்வி (பீகார் எதிர்க்கட்சித் தலைவர்) ஆகியோர் “இந்தியா” கூட்டணிக் கட்சியினருடன் “வாக்கு உரிமை யாத்திரை” பயணம் மேற் ்கொண்டு வருகின்றனர். பீகார் முழு வதும் செல்லும் இடமெல்லாம் இந்த யாத்திரைக்கு மக்கள் அமோக வர வேற்பு அளித்து வருகின்றனர். இத னால் பீகாரில் “இந்தியா” கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. சுஹ்தான் இந்நிலையில், வாக்குத் திருட்டு தொடர்ந்து அம்பலமாகி வருவதாலும், பீகாரில் தோல்வி பயம் கழுத்தை நெருக்கிக் கொண்டிருப்பதாலும் பாஜக “இந்தியா” கூட்டணி கட்சித் தலைவர்களை சாதி ரீதியாக இழிவு படுத்தி அவமானப்படுத்தும் வேலை களை தொடங்கியுள்ளது. அதாவது “சுஹ்தான் (Chuhdan)” இந்தி மொழி சொல் மூலம் சமூக வலைதளங்களில் “இந்தியா” கூட்டணி கட்சித் தலைவர்க ளுக்கு பாஜக அவதூறு பரப்பி வருகிறது. “சுஹ்தான்” என்றால் எலிகள் (Rats) என்று பொருள். ஆனாலும் தலித் மக்களை மனிதர்களாக அல்லாமல், ஒரு தீங்கு விளைவிக்கும் விலங்குடன் ஒப்பிட்டு, அவர்களை தாழ்த்தி அவமா னப்படுத்திடும் நோக்கத்தோடு “சுஹ்தான்” என்ற இந்தி வார்த்தை வடமாநிலங்களில் ஆபாச வார்த்தை போன்று பயன்படுத்தப்படுகிறது. இந்த சொல்லை வைத்து தான் பாஜக தற்போது “இந்தியா” கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு எதிராக வெறுப்பை பரப்பி வருகிறது. இந்நிலையில், பாஜகவின் இந்த சாதி ரீதியிலான அடாவடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சட்டரீதியான நடவ டிக்கையை தொடங்கியுள்ளது. எஸ்சி/எஸ்டி (தலித் மற்றும் பழங்குடி) சட்டம், 1989இன் கீழ் (தலித் சமூகத்தி னரை அவமானப்படுத்தும் மற்றும் தாழ்த்தும் எந்தவொரு செயல் அல்லது வார்த்தையும் கடுமையான தண்டனைக்கு உட்பட்டது) பாஜக மீது முறையான நடவடிக்கை எடுக்கக் கோரி பாட்னா காவல்நிலையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளன. பீகாரில் தற்போது பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடை பெற்று வருவதால் காங்கிரஸ் அளித் துள்ள புகார் மீது காவல்துறை நட வடிக்கை எடுக்குமா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.