states

img

வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு-காஷ்மீர் பலி எண்ணிக்கை 31ஆக உயர்வு

வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு-காஷ்மீர் பலி எண்ணிக்கை 31ஆக உயர்வு

ஸ்ரீநகர் இமயமலைச் சாரலில் உள்ள ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2 வார காலமாக விட்டு விட்டு கனமழை வெளுத்து வாங்கி வரு கிறது. திங்களன்று இரவு முதல் புதன்கிழமை அன்று காலை வரை நீடித்த 31 மணிநேர அதீத கனமழையால் ஜம்மு-காஷ்மீர் வெள்ளத்தில் தத்தளித்து வரு கிறது. இதில் ஜம்மு, கிஷ்த்வார், தோடா மாவட்டங்கள் உருக் குலைந்து விட்டன. ஜம்முவில் வர லாறு காணாத அளவில் கடந்த 20 மணிநேரத்தில் 250 மிமீ அளவில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. இதனால் ஜம்மு மண்டலம் இயல்புநிலையை முற்றிலும் இழந்து தவிக்கிறது. அதே போல ரியாசி, ரஜோரி, ரம்பன் மற்றும் பூஞ்ச் மாவட்டங்க ளும் கனமழையால் பலத்த சேதத்தை எதிர்கொண்டுள்ளன. பலி எண்ணிக்கை  உயரும் அபாயம் குறிப்பாக செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் மேகவெடிப்பால் திரிகூட மலையின் உச்சியில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் செல்லும் பாதையில் (போஜ்னா லயா அருகே) நிலச்சரிவு ஏற் பட்டது. கோவிலுக்குச் சென்று கொண்டு இருந்த மக்கள் பலர் நிலச்சரிவில் சிக்கி மண்ணோடு மண்ணாக புதைந்தனர். அவர்க ளை மீட்க மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் ராணுவ வீரர்கள் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு நிலவரப்படி போஜ்னாலயா நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்த 17 பேர் சட லமாக மீட்கப்பட்டனர். செவ்வாய்க்கிழமை இரவு கன மழை நீடித்ததால் புதன்கிழமை காலை மீட்புப் பணி மீண்டும் தொடங்கியது. புதன்கிழமை அன்று மாலை நிலவரப்படி மேலும் 14 உடல்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது. படுகாயமடைந்த நிலையில் மீட்கப் பட்டவர்களின் நிலைமை கவ லைக்கிடமாக இருப்பதாலும், பலர் காணாமல் போயுள்ளதாலும் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இருளில் மூழ்கிய ஜம்மு கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஜம்முவின் பெரும் பகுதிகளில் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியது. அதே போல இணையம், தொலைபேசி சேவை களும் முடங்கின. இதனால் ஜம்மு பகுதி தனித்தீவாக  துண்டிக்கப் பட்டன. இதேபோல கிஷ்த்வார், தோடா, ரியாசி, ரஜோரி, ரம்பன் மற்றும் பூஞ்ச் மாவட்டங்களும் மின்சாரம், இணையம், தொலை பேசி சேவை இன்றி இயல்பு வாழ்க் கையை இழந்தது. குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்கள் உணவு, தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். பள்ளிகளுக்கு விடுமுறை : தேர்வுகள் ஒத்திவைப்பு கனமழையால் ஜம்மு-காஷ்மீ ரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் புதன் கிழமை விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. மேலும் புதன்கிழமை திட்டமிடப்பட்ட 10 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான  தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சில கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் மூடல் : ரயில் சேவை முடங்கியது அதீத கனமழை காரணமாக செனாப், தாவி, உஜ், ராவி, சகார் காட் மற்றும் பசந்தர் உள்ளிட்ட அனைத்து ஆறுகளும் அபாய அளவை தாண்டி பாய்ந்து வரு கிறது. மாதோபூர் அணை நிரம்பி வழிந்ததால் கனமழையை பெரி யளவில் எதிர்கொள்ளாத கதுவா வில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது. ஜம்முவில் உள்ள நான்கா வது தாவி பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டது. இதனால் பல வாகனங் கள் பாலத்தில் சிக்கிக்கொண்டன. கிஷ்த்வாரில் உள்ள பார்டர் சாலை மற்றும் உதம்பூரில் உள்ள ராம்நகர்- உதம்பூர் சாலை ஆகியவை வெள்ளத்தில் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டன. தேவக் பாலத்தின் ஒரு தூண் இடிந்து விழுந்ததால் ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ரம்பனில் பாறைகளோடு வெள் ளம் கரைபுரண்டோடி வருவதால் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ் சாலை மூடப்பட்டுள்ளது. அதே போல காத்ரா, உதம்பூர் மற்றும் ஜம்முவிற்குச் செல்லும் மற்றும் புறப்படும் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாட்டின் முக்கிய பகுதிகளில் இருந்து ஜம்முவிற்கு செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நின்றும், வந்த வழி யில் திரும்பி கிளம்பியுள்ளதாகவும் செய்திகள் கிளம்பியுள்ளன.