states

ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் பாஜவை தோற்கடித்த சிபிஎம் வாக்குகள்

புதுதில்லி, ஜுன் 12- ராஜஸ்தானில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் இருவரின் தோல்வி, சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் உறுதி செய்யப்பட்டது. சிபிஎம் எம்எல்ஏக்கள் கிரிதர்லால் மற்றும் பல்வான் புனியா ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர். பாஜக ஆதரவு ஜீ நியூஸ் காட்சி ஊடக உரிமையாளர் சுபாஷ் சந்திராவின் தோல்விக்கு இந்த வாக்குகள் தீர்க்கமானவை. ராஜஸ்தானில் இருந்து முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங்  சுர்ஜேவாலா, பிரமோத் திவாரி (காங்கிரஸ்), கன்ஷியாம் திவாரி (பாஜக) ஆகியோர் வெற்றி பெற்றனர். இதற்கிடை யில் அரியானாவில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் எதிர்த்து  வாக்களித்ததால் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அஜய் மாக்கன் தோல்வியடைந்தார். மாறாக பாஜகவால் நிறுத்தப்பட்ட கார்ப்பரேட் ஊடக அதிபர் கார்த்திகேயன் சர்மா வெற்றி பெற்றார்.