வகுப்புவாதத் தாக்குதலுக்கு ஆளான முஸ்லிம் சிறுவர்களுக்கு சிபிஎம் ஆறுதல்
குப்வாரா பாஜக ஆளும் உத்தர கண்ட் மாநிலம் டேரா டூனில் ஜனவரி 28ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுவர்க ளான டேனிஷ் அகமது கனி, அவரது தம்பி தபீஷ் அகமது கனி ஆகிய இருவரும் (முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள்) சால்வை வியாபா ரம் செய்து விட்டு தங்களது இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது விகாஸ் நகர் அருகே உள்ள ஒரு கடையில் தேநீர் அருந்த நின்ற போது சிறுவர்களிடம் இருந்து பணத்தை பறிக்க, இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த தேநீர்க் கடைக்காரரும், அவரது நண்ப ரும்,“இது உத்தரகண்ட், காஷ்மீர் அல்ல. இவர்கள் முஸ்லிம்கள். முதலில் ஒருவனை முடிப்போம், மற்றவனை பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறி, இரும்புக் கம்பியால் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தபீஷ் பலத்த காயமடைந்தார். அவருக்கு கையில் எலும்பு முறிவுடன், தலை யில் 10 தையல்கள் போடப்பட்டுள் ளன. டேனிஷ் காலில் லேசான காயங்களுடன் தப்பினார். இருவ ரும் தற்போது குப்வாரா மாவட்டத் திற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் வகுப்புவாதத் தாக்கு தலுக்கு ஆளான தபீஷ் அகமது கனி, டேனிஷ் அகமது கனி மற்றும் அவர்களது குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தூதுக்குழுவினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்தத் தூதுக்குழுவில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் விஜூ கிருஷ்ணன், உத்தரகண்ட் மாநிலச் செயலாளர் ராஜேந்திர புரோகித், மாநில செயற்குழு உறுப்பினர் நிதின் மலேட்டா, மாநிலக் குழு உறுப்பினர்கள் கம்ருதீன், புரு ஷோத்தம் பதோனி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். கண்டனம் இதுதொடர்பாக சிபிஎம் தூதுக் குழுவினர் கூறுகையில், “சிறுவர்கள் இருவரும் குப்வாரா வில் 10ஆம் வகுப்பு படிக்கின்ற னர். குளிர்கால விடுமுறை நேரத் தில், டேராடூனின் விகாஸ் நகரில் சால்வைகளை விற்றுத் தங்கள் குடும்பத்திற்கு உதவியாக இருந்த போது வகுப்புவாதத் தாக்குதலு க்கு ஆளாகியுள்ளனர். உத்தர கண்ட் பாஜக அரசு குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதே போல, பாதிக்கப் பட்ட குடும்பத்திற்கும் எந்த உதவி யும் வழங்கவில்லை. இத்தகைய வெறுப்புணர்ச்சியான சூழலை உரு வாக்கியதற்கு பாஜக அரசே பொ றுப்பு. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து சட்டப் பூர்வ மற்றும் மருத்துவ உதவிக ளும் சிபிஎம் சார்பில் வழங்கப் படும்” என உறுதி அளித்துள்ளது.
