‘மணிப்பூர் வன்முறைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’ குக்கி ‘தேசிய ராணுவம்’ எச்சரிக்கை; பள்ளத்தாக்கில் பதற்றமான சூழல்
மணிப்பூர் மணிப்பூரில் நிலவி வரும் வன் முறைப் பதற்றத்துக்கு இடையே அம்மாநில பாஜக முதலமைச்சர் யும்னம் கெம்சந்த் சிங், குக்கி-சோ கவுன்சில் தலைவர்களுடன் சனிக் கிழமையன்று சந்தித்துப் பேசினர். மணிப்பூரில் புதிய அரசு பதவி யேற்ற பிறகு, இரு தரப்பினருக்கும் இடையே நடைபெறும் முதல் நேரடி சந்திப்பு இதுவாகும். அசாம் மாநிலம் கவுகாத்தி யில் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில், குக்கி-சோ இனத்த வர் வாழும் பகுதிகளை ஒருங்கி ணைத்து, யூனியன் பிரதேச அந் தஸ்துடன் கூடிய “தனி நிர்வாகம்” வேண்டும் என்பதில் குக்கி தலை வர்கள் உறுதியான நிலைப்பாட்டை முன்வைத்தனர். இந்த கோரிக்கையோடு கூட் டம் நிறைவடைந்ததாகக் கூறப் படும் நிலையில், மணிப்பூர் வன் முறைக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என ஐக்கிய குக்கி தேசிய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக குக்கி ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மணிப்பூரில் எந்த வொரு மோதலிலும் வன்முறைக் குக் காரணமானவர்கள் தண்டிக் கப்படாவிட்டால், பாதிக்கப்பட்ட மக்கள் அரசை நம்புவது கடி னம். அதனால் வன்முறைக்கு தார் மீகப் பொறுப்பு ஏற்பது மிகவும் அவசியம். தார்மீகப் பொறுப்பு என்பது வெறும் தண்டனை மட்டு மல்ல, நடந்த தவறுகளைச் சரி செய்வதற்கான ஒரு உறுதிமொழி யாகவும் பார்க்கப்படுகிறது” என அதில் கூறப்பட்டுள்ளது. பாஜகவின் இழிவான அரசிய லால் மணிப்பூரில் குக்கி - மெய்டெய் இடையே வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஐக்கிய குக்கி தேசிய ராணுவத்தின் அறிக்கைக்கு மெய்டெய் சமூகத் தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள னர். இதனால் மணிப்பூரில் சில வாரங்களுக்குப் பிறகு பள்ளத்தாக் கில் மீண்டும் வன்முறை பதற்றம் தீவிரமடைந்துள்ளது.
