states

தில்லி, மும்பையை தாக்குவோம் பாக்., முன்னாள் ஆணையர் சர்ச்சைப் பேச்சு

தில்லி, மும்பையை தாக்குவோம் பாக்., முன்னாள் ஆணையர் சர்ச்சைப் பேச்சு

சமீபத்தில், 2026ஆம் ஆண்டுக்கான  வருடாந்திர அச்சுறுத்தல் மதிப் பீட்டை செனட் சபையில் தாக்கல் செய்த அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் கபார்ட்,”பாகிஸ்தானின் நீண்ட தூர வெகுரக ஏவுகணைத் திட்டம்  விரைவில் அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும்” என கூறி  இருந்தார். இதனால் ஈரானின் அணுசக்தி நிலை யங்களை அமெரிக்கா தாக்குவது போல்,  எதிர்காலத்தில் பாகிஸ்தானின் அணு சக்தி நிலையங்களையும் அமெரிக்கா தாக்கலாம் என்ற விவாதத்துடன் செய்தி கள் வெளியாகின. இந்நிலையில், அமெரிக்கா பாகிஸ் தானை தாக்கினால் பதிலடியாக இந்தி யாவை தாக்குவோம் என இந்தியாவுக் கான பாகிஸ்தானின் முன்னாள் உயர் ஆணையர் அப்துல் பாசித் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகை யில்,”ஈரானில் நிலைமை மோசமடைந்து,  இஸ்ரேல் பாகிஸ்தானை  நெருங்கி நிலை  கொள்கிறது என்று வைத்துக்கொள் ளோம். அப்போது அமெரிக்கா பாகிஸ்தா னின் அணுசக்தித் திட்டத்தை எதிர்மறை யாகப் பார்க்கும். குறிப்பாக பாகிஸ்தா னின் அணுசக்தித் திறனை அழிக்க முயற்  சிக்கும் ஒரு சூழல் உருவாகிறது என்றும்  வைத்துக்கொள்வோம். நான் ஒரு மிக  மோசமான சூழ்நிலையைப் பற்றிப் பேசு கிறேன். நான் கூறுவது சாத்தியமற்றது தான். ஆனால் பாகிஸ்தானுக்குத் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் திறன்  உள்ளது. ஒருவேளை அமெரிக்கா பாகிஸ்தானைத் தாக்கினால், வளைகுடா வில் உள்ள அவர்களின் தளங்களை அடையவோ அல்லது இஸ்ரேலைத் தாக்கவோ முடியாவிட்டால், தயக்க மின்றி இந்தியாவைத் தாக்குவோம். மும்பை, புதுதில்லி மீது தாக்குதல்  நடத்துவோம். நாங்கள் பின்வாங்க மாட்டோம். அதன்பிறகு என்ன நடந்தா லும் அது பின்னர் கையாளப்படும்” என  அவர் பேசியுள்ளார்.  மேற்கு ஆசிய மற்றும் பாகிஸ்தா னுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையி லான போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் அப்துல் பாசித்தின் இந்தக் கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.