பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ், இடதுசாரி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் போராட்டம்
பாஜக தலைமையிலான மகாராஷ்டிரா அரசு கொண்டு வந்த “சிறப்பு பொது பாதுகாப்பு சட்டத்திற்கு (Special Public Security Bill)” எதிர்ப்பு தெரிவித்து மும்பை ஆசாத் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள், சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத்) மற்றும் பல முற்போக்கு சமூக அமைப்புகள் மற்றும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் (சரத்) மூத்த தலைவர் சுப்ரியா சுலே, சிபிஎம் எம்எல்ஏ வினோத் நிகோலே ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.