states

தில்லி, மும்பை உயர்நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லி, மும்பை உயர்நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லி உயர்நீதிமன்றம் ஓல்ட் போர்ட் லேக் அருகே உள்ளது.  இந்த உயர்நீதிமன்றத்திற்கு வெள்ளிக் கிழமை அன்று காலை 11:40 மணி அள வில் மின்னஞ்சல் மூலமாக வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டலால் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டன. மோப்ப நாய் உதவி யுடன் காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் நீதிமன்றத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். எனினும் சோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் வெடி  குண்டு எதுவும் கண்டு பிடிக்கப்பட வில்லை. எனவே இது புரளி என தில்லி காவல்துறை அறிவித்தது. தில்லி  உயர்நீதிமன்றத்தை தொடர்ந்து, மகா ராஷ்டிரா மாநிலம் மும்பை உயர்நீதி மன்றத்திற்கும் மின்னஞ்சல் மூலம் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டதால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.