states

img

பிரதமர் மோடி பிறந்தநாள் விழா புகைப்படம் எடுத்தவுடன் நோயாளியிடமிருந்து பிஸ்கட்டைப் பறித்த பாஜக நிர்வாகி

பிரதமர் மோடி பிறந்தநாள் விழா புகைப்படம் எடுத்தவுடன் நோயாளியிடமிருந்து பிஸ்கட்டைப் பறித்த பாஜக நிர்வாகி

செப்.17 அன்று பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக ஆளும் ரா ஜஸ்தான் மாநி லத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஆர்யுஎச்எஸ் (RUHS) மருத்துவமனையில் பாஜக சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நோயாளிகளுக்கு பிஸ்கட்டுகள் விநியோகிக்கப்பட்டன. ஆனால்  பிஸ்கட்டுகள் கொடுத்து புகைப்படம் எடுத்தவுடன் நோயாளிக்குக் கொடுத்த பிஸ்கட்டைப் பாஜக பெண் நிர்வாகி ஒருவர் உடனடியாக பறித்துச் சென்றுள்ளார்.  இந்நிகழ்வை மருத்துவரும், இடதுசாரி ஆர்வலருமான பிரிஷா சர்காம் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு அம்பலப்படுத்தினார். வீடியோவில் பாஜக பெண் தொண்டர் நோயாளிக்குக் கொடுத்த ரூ.10 பிஸ்கட் பாக்கெட்டைப் புகைப்படம் எடுத்தவுடன் உடனடியாகப் பறிக்கும் சம்பவம் பதிவாகியுள்ளது.  முகம் சுளிக்க வைக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பாஜகவிற்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.