states

“பீகாரில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை வளைத்து பயன்பெறும் பாஜக

“பீகாரில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை வளைத்து பயன்பெறும் பாஜக

பெங்களூரு ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்ற அரசு அதிகாரி இடைநீக்கம் தமிழ்நாட்டை முன்மாதிரியாக எடுத்து கொண்டு கர்நாடகாவில் உள்ள அரசு கட்டடங்களில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என முதலமைச்சர் சித்தராமையாவுக்கு, அம்மாநில அமைச்  சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதி யிருந்தார். இதனையடுத்து தமிழ்நாட்டில்  அரசு நிலம், கட்டடங்களில் ஆர்எஸ்எஸ்  நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டி ருப்பது போல், கர்நாடகாவிலும் தடை விதிப்பது குறித்து மதிப்பாய்வு செய்ய தலைமைச் செயலருக்கு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்தார். மேலும், கர்நாடக மாநிலத்தில் பொது  இடங்கள், பள்ளிக்கூட வளாகங்கள் போன்றவற்றில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நடைபெற தடைவிதிக்கும் வகையில் விதி கொண்டுவர அம்மாநில அமைச்ச ரவை முடிவு செய்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் அந்த அமைப்பின் சீருடை அணிந்து கலந்துகொண்ட பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி இடைநீக்கம் செய்யப்  பட்டார். பாட்னா “பீகாரில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை வளைத்து பயன்பெறும் பாஜக” பீகார் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டு களில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை வளைத்து பாஜக பயன் பெற்றுள் ளது என ஜனநாயக சீர்திருத்த சங்க  (ADR) அறிக்கை மூலம் அம்பலமாகி யுள்ளது. இதுதொடர்பாக அந்த அமை ப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பீகார்  மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில், அதாவது 2020ஆம் ஆண்டு நடைபெற்ற  சட்டமன்ற தேர்தல் முதல் 17 எம்எல்ஏக்கள்  கட்சி தாவியுள்ளனர். இந்த எண்ணிக்கை  இதுவரை இல்லாத வகையில் அதிக பட்சம் ஆகும். அதிகபட்சமாக பாஜகவில் 7 எம்எல்ஏக்கள் சேர்ந்துள்ளனர். அதே போல பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய  ஜனதாதளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா  தளம் கட்சிகளில் தலா 5 எம்எல்ஏக்கள் இணைந்துள்ளனர் என அதில் கூறப்பட் டுள்ளது. லூதியானா பஞ்சாப்: பயணிகள்  ரயிலில் தீவிபத்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து சகர்சாவுக்கு (பீகார்) பய ணிகள் ரயில் சென்று கொண்டு இருந்தது. இந்த ரயில் சிரிகந்த் அருகே  வந்த பொழுது 19ஆவது பெட்டியில் புகை  வந்ததை பார்த்த பயணிகள் உடனடியாக அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து  ரயிலை நிறுத்தியுள்ளனர். ஒரு பெட்டியில்  இருந்து புகை வந்ததும் துரிதமாகச் செயல்பட்ட ஊழியர்கள், ரயிலின் பிற  பெட்டிகளை அதிலிருந்து துண்டித்துள்ள னர். எனினும், கொழுந்து விட்டு எரிந்த தீ,  3 பெட்டிகள் வரை பரவியது.  காயம் அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில்  பயணிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை.  புகை வந்ததும் பெட்டியில் இருந்து வெளியே குதித்த சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் கிடை த்ததும் உடனடியாகச் சென்ற தீயணைப்பு  வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறி த்து விசாரணை நடைபெற்று வருகிறது.