வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மக்களுக்கு நிவாரணம் வழங்கிய அகில இந்திய விவசாயிகள் சங்கம்
ரூ.25,000 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் ; மோடி அரசுக்கு கோரிக்கை
சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி முதல் செப்., முதல் வாரம் வரை கனமழை வெளுத்து வாங்கியது. திட்டமின்றி அணைகள் திறக்கப்பட்டதால் 1,400 கிராமங்கள் மிக மோசமான அளவில் உருக்குலைந்தன. அதே போல 5 லட்சம் ஏக்கருக்கு அதிகமான விவசாய நிலங்கள் குளங்களாக மாறின. 55 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் காணாமல் போகும் அளவிற்கு வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. குறிப்பாக பாகிஸ்தான் எல்லை யில் உள்ள குருதாஸ்பூர் மாவட்டம் கனமழை வெள்ளத்தால் முற்றிலும் இயல்புநிலையை இழந்தது. இந்நிலையில், கனமழை வெள்ளத்தால் இயல்புநிலையை இழந்து தவிக்கும் பஞ்சாப் மாநில மக்களுக்கு அகில இந்திய விவசாய சங்கம் நிவாரணம் வழங்கியது. அக்., முதல் வாரத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் விஜூ கிருஷ்ணன், துணைத் தலை வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அம்ரா ராம், பொருளாளர் பி. கிருஷ்ண பிரசாத், துணைத் தலைவர் இந்தர்ஜித் சிங், மத்தி யக்குழு உறுப்பினர்கள் பெமா ராம், புஷ்பிந்தர் தியாகி மற்றும் மனோஜ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் சுக்விந்தர் சேகான், பஞ்சாப் விவசாயிகள் தலைவர்களான பால்ஜித் கிரேவால், சத்நாம் பரைச், மேஜர் சிங் ஆகியோர் அடங்கிய குழு வெள்ளத்தால் மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ள தரன் தரன், அமிர்தசரஸ், குர்தாஸ்பூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. 3 மாவட்டங்களின் வெவ்வேறு பகுதிகளை பார்வையிட 2 குழுக்கள் உருவாக்கப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், விவ சாய நிலங்களை ஆய்வு செய்த பின் பாதிக்கப் பட்ட மக்களுக்கு அகில இந்திய விவசாய சங்க குழு நிவாரணம் வழங்கியது. நிவாரணத் தொகுப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொ ருட்கள் மற்றும் அடுத்த விதைப்பு பருவத்திற்கு டீசல், விதைகள் வழங்கப்பட்டன. மேலும் டிராக்டர்கள் உதவி, டீசல் போன்றவற்றின் மூலம் ஏழை விவசாயிகளுக்கு விதைப்புக் காலங்களில் கூடுதல் உதவி செய்வோம் என அகில இந்திய விவசாயிகள் சங்கம் உறுதி யளித்துள்ளது. மோடி அரசு மீது பஞ்சாப் மக்கள் குற்றச்சாட்டு கனமழை பேரழிவு ஏற்பட்டு ஒன்றரை மாதம் கடந்தும், நிவாரணம் மற்றும் இழப்பீடு தொடர்பாக ஒரு ரூபாய் கூட தங்களுக்கு வரவில்லை என்றும், பஞ்சாப்பின் ஆம் ஆத்மி மாநில அரசு மற்றும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒன்றிய அரசு இரண்டும் முழுமையாக தங்கள் பொறுப்பை துறந்துவிட்டதாக சுற்றுப்பயணத்தின் போது அகில இந்திய விவசாயிகள் சங்க குழுவிடம் பஞ்சாப் மக்கள் சரமாரியாக குற்றம் சாட்டினர். கூடுதல் இழப்பீடு வழங்குக! சுற்றுப்பயணத்தின் பின்பு அகில இந்திய விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “கனமழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மக்கள் இன்னும் முழுமையாக இயல்புநிலையை அடைய வில்லை. இந்த கனமழை பேரழிவுக்கு திட்ட மின்றி அணையை திறந்த பக்ரா பியாஸ் மேலாண்மை நிர்வாகத்தின் (பக்ரா மற்றும் பியாஸ் அணைகளின் பாதுகாப்பு மற்றும் பரா மரிப்பு ஆணையம்) குற்றத்திற்குரிய அலட்சி யத்தின் விளைவாகும். பிரதமர் மோடி பஞ்சாப் மக்களுக்கு நிவாரணமாக அறிவித்த 1,600 கோடி ரூபாய் என்பது மிகக் குறைவானது. மோடி அரசின் இந்த மிகக் குறைவான தொகையை அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடுமையாகக் கண்டிக்கிறது. அதனால் 25,000 கோடி ரூபாய் நிவாரணப் பணம், ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு, கால்நடை இழப்பிற்கான இழப்பீடு, அடுத்த பருவத்திற்கான இலவச விதைகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு 3 மாத ஊதியம், கடன் தள்ளுபடி, வட்டி மானியம் ஆகியவற்றை மோடி அரசு வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தது. போராட்டம் சுற்றுப்பயணத்தின் நிறைவாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் டாக்டர் அசோக் தாவ்லே, விஜூ கிருஷ்ணன், அம்ரா ராம், சுக்விந்தர் சிங் சேகான் ஆகியோர் பேசினர். இதன் முடிவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வ தற்காக, ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் பிற மக்கள் அமைப்புகளுடன் ஒன்றிணைந்து பஞ்சாப் முழுவதும் போராட்டங்கள் நடத்தப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
