சத்தீஸ்கரில் 1742 ஹெக்டேர் காடுகளை அழிக்கும் முடிவை கைவிடுக!
ஒன்றிய சுற்றுச்சூழல், வனங்கள் துறை அமைச்சருக்கு பிருந்தாகாரத் கடிதம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் 1742 ஹெக்டேர் பரப்பளவுள்ள காடுகள் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்ப்பதற்காக அழிக்கப்படும் முடிவை ஒன்றிய அரசாங்கம் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வர் பிருந்தா காரத், ஒன்றிய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றத் துறை ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு: சத்தீஸ்கர் வனத்துறை, கெண்டே விரிவாக்க நிலக்கரித் திட்டம் செயல்படுத்தப்படுவதற்காக, 1742 ஹெக்டேர் அடர்ந்த வனப்பகுதியை அழிப்ப தற்கு முடிவு செய்திருக்கிறது. இதனைத் தடுத்து நிறுத்த உங்கள் தலையீட்டைக்கோரி இக்கடிதத்தை எழுதுகிறேன். பொதுநலன் கருதியல்ல ஹஸ்டியோ-அராண்ட் பிராந்திய நிலக்கரி திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்தத் திட்டம், ராஜஸ்தான் அரசுக்கு சொந்தமான மின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது என்பது உங்க ளுக்குத் தெரிந்திருக்கும். முன்னாள் ராஜஸ்தான் அரசாங்கம் அதானி எண்டர்பிரைசஸ்சுடன் பர்சா கெண்டே காலியரிஸ் லிமிடெட் என்ற கூட்டு முயற்சியை அமைத்தது. இதில் அதானி நிறு வனம் 74% பங்குகளை வைத்துள்ளது. இந்த நிறுவனம் ஹஸ்டியோ-பர்சா நிலக்கரி திட்டத்தின் சுரங்க மேம்பாட்டாளர் மற்றும் ஆபரேட்டராக நியமிக்கப்பட்டது. இந்த முயற்சியின் கீழ் வெட்டியெடுக்கப்பட்ட கணிசமான அளவு நிலக்கரி ‘நிராகரிக்கப்பட்ட நிலக்கரி’ பயன்பாடு என்ற பெயரில் தனியார் நிறுவனத்தின் மின் திட்டங்களுக்கு ‘பொது நலன்’ கருதி திருப்பி விடப்பட்டதாக பதிவுகள் காட்டுகின்றன. இதில் பொது நலன் எதுவும் இல்லை. கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக தனியார் கனிம வளங்களைச் சுரண்டுவது மட்டுமே இதில் அடங்கும். மரங்களை அழித்த திறந்த வெளிச் சுரங்கம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஏற்கெனவே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சுரங்கப் பணிகள் நடைபெறும் பகுதிகளுக்கு மேலும் பேரழிவை ஏற்படுத்தும். அதிகா ரப்பூர்வ ஆய்வு அறிக்கையின்படி, குறைந்தது 4.5 லட்சம் மரங்கள் வெட்டப்பட உள்ளன. இவை அடர்ந்த காட்டில் உள்ளன. இது கார்பன் பிரித்தெ டுப்புக்கு முக்கியமான உள்நாட்டு மரங்களால் நிறைந்துள்ளவை. இந்தப் பகுதியில் திறந்த வெளிச் சுரங்கம் ஏற்கெனவே ஆயிரக்கணக் கான மரங்களை அழித்துவிட்டது, நிலத்தடி நீரை யும் மண்ணையும் மாசுபடுத்தி இருக்கிறது. கிராமசபைகளின் ஒப்புதல் பெறாமல் மேலும், இந்த திட்டங்கள் சம்பந்தப்பட்ட கிராம சபைகளின் கருத்துக்களையும், கிராம சபைகளின் ஒப்புதலையும் புறக்கணித்து மேற் கொள்ளப்படுகின்றன. திறந்தவெளிச் சுரங்கம் உண்மையான திட்டத்திற்கு அப்பால் மிகப் பெரிய புவியியல் பகுதியை பாதிக்கிறது. எனவே இந்த குறிப்பிட்ட பகுதியில் மனித வாழ்விடம் மிகக் குறைவாக இருந்தாலும், பகுதிக்கு வெளியே உள்ள பல கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். முன்னதாக, உள்ளூர் மக்களிட மிருந்து 1500க்கும் மேற்பட்ட எழுத்துப்பூர்வ ஆட்சேபனைகள் அரசாங்கத்திற்கு அனுப்பப் பட்டன. ஆனால் அவை புறக்கணிக்கப் பட்டுள்ளன. நீங்கள் கூறியதை நினைவூட்டுறேன் சில மாதங்களுக்கு முன்பு, இந்திய வன ஆய்வு அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்கும் போது, “2006 வன உரிமைச் சட்டத்தின் கீழ் உரிமைகள் வழங்கப்படுவதால் வனப்பகுதி இழக்கப்படுகிறது. கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை...” (இந்துஸ்தான் டைம்ஸ், ஜூன் 5) என்று நீங்கள் கூறியதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். வளர்ச்சி என்ற பெயரில் தனியார் சுரங்கத் திட்டங்களால் நமது காடுகள் அழிக்கப்படுவ திலிருந்து பாதுகாக்க கடுமையான பாது காப்பு நடவடிக்கைகள் உண்மையில் தேவை. இந்தப்பகுதியில் வாழ்ந்துவரும் பழங்குடி யினர்தான், இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதன் மூலமும், மரங்களைக் காப்பாற்று வதற்கான அவர்களின் முயற்சிகள் மூலமும், இந்தியாவில் காடுகளின் உண்மையான பாது காவலர்கள் தாங்கள்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள். பல்லுயிர்ப்பகுதியை காப்பற்றுக ஒரு தனியார் நிறுவனத்தின் நலன்களைக் காட்டிலும், காடுகளையும், வேண்டுமென்றே மரங்களை வெட்டுவதையும், ஒரு வளமான பல்லுயிர்ப் பகுதியை அழிப்பதையும் காப்பாற்றுவது உங்கள் பொறுப்பு என்ற முறை யில் இந்தக்கடிதத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்ச ரான உங்களுக்கு, எழுதுகிறேன். இதனைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பிருந்தா காரத் அந்தக் கடி தத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். (ந.நி.)