states

img

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த 74 குடும்பங்கள்

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த 74 குடும்பங்கள்

அகர்தலா திரிபுராவில் தன்னாட்சி மாவட் ்டக் கவுன்சில் (ஏடிசி)  தேர்தல் அறிவிக்கப்பட்ட தைத் தொடர்ந்து, பழங்குடியினப் பகுதிகளில் இழந்த தனது செல் வாக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி படிப்படியாக மீண்டும் பெற்று  வருகிறது. ஏடிசி-யில் திப்ரா மோதா கட்சியின் தவறான நிர்வா கம் மற்றும் பாஜக தலைமையி லான மாநில அரசின் தோல்விக ளால், பழங்குடியின மக்கள் மீண்டும் சிபிஎம் (கண முக்தி பரிஷத் - சிபிஎம் உடன் இணைந்த பழங்குடியினர் பிரிவு) கட்சியில் இணைந்து வருகின்றனர். உதய்பூர் உட்கோட்டத்தின் கர்ஜி மற்றும் அமர்பூர் உட்கோட்ட த்தின் அம்பி ஆகிய இடங்களில் நடைபெற்ற இரண்டு தனித்தனி நிகழ்ச்சிகளில், 74 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 234 பழங்குடி யின வாக்காளர்கள் மீண்டும் கட்சியில் இணைந்தனர்.  மாதான்பாரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கர்ஜி பகுதி யில் நடைபெற்ற முதல் நிகழ்ச்சி யில், 40 குடும்பங்களைச் சேர்ந்த 127 வாக்காளர்கள் கட்சியில் இணைந்த னர். அம்பி பகுதியில் நடைபெற்ற 2ஆம் நிகழ்ச்சியில், 34 குடும்பங்க ளைச் சேர்ந்த 107 பழங்குடியின வாக்காளர்கள் மீண்டும் கட்சியில் இணைந்து தங்களது ஆதரவை உறுதிப்படுத்தினர். திரிபுராவின் பூர்வகுடி மக்களிடையே ஏற் பட்டுள்ள இந்த அரசியல் மாற்றமா னது அம்மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.