states

ஜன்னி கண்ட நோயாளிபோல் பிரதமர் பிதற்றுவதா?

பாஜக - பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவரது கட்சியின ரின் தேர்தல் பிரச்சாரம் - அதன் ஏழு  கட்டங்களிலும், ஒவ்வொரு கட்டம் முடிந்து, இறுதிக் கட்டங்களை நோக்கிடும் நிலையில், அவர்களது ‘‘400 கனவு’’ ஒருபோதும் நனவாகாது என்ப தோடு, நாளுக்கு நாள் அவரது 10 ஆண்டுகால ஆட்சியின் அவலங்களை மக்கள் நன்கு புரிந்துகொண்டு, மோடி ஆட்சிக்கு வழியனுப்பு விழா நடத்த  வட மாநிலங்கள் உள்பட நாடு முழு வதும் உள்ள வாக்காளர்கள் தயாராகி விட்டனர்; வாக்குகளையும் 5 கட்டங்களில் பாஜகவிற்கு எதிராக அளித்துள்ளனர். இந்தத் தோல்வியைத் தெளிவாக பாஜகவும், அதன் பிரதான பரப்புரை யாளரான பிரதமர் மோடியும் நன்கு புரிந்துகொண்டதால், நிலைகுலைந்து, ஜன்னி கண்ட நோயாளி பிதற்றுவது போல, உச்சவரம்பின்றி பொய்ப் பிரச்சா ரங்களில் - முற்றிலும் தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக அவதூறு பேச்சினை - வெறுப்புரைகளை நாளும் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டுள்ளனர். ‘‘மக்கள் பேசிக் கொள்கிறார்கள்’’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி, யார் வேண்டுமானாலும், எதை வேண்டு மானாலும் எழுதலாம்; பேசலாமே. அது அவர்கள் பக்கம் திரும்ப ஆரம்பி த்தால், நாட்டின் பொதுவாழ்வின் நாகரிகம் காற்றில் பறந்துவிடுமே! தேர்தல் வெற்றி - தோல்வி என்பதை விட, அறிவு நாணயமும், அரசியல் நனி நாகரிகமும் முக்கியம் என்பதை உணரவேண்டாமா? முன்னது தற்காலிகம்; பின்னது  நிரந்தரமானது என்பதை அவர்களுக்கு வாக்காளர்கள் - நல்ல தோல்வியைத் தந்து, தக்க பாடம் புகட்டவேண்டும்.அப்போதுதான், ஜனநாயகம் இழந்துவரும் பொலிவை, மீட்டெடுக்க முடியும்!

;