states

img

அமைச்சர் குவைத் செல்ல அனுமதி மறுப்புக்கு கேரள எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்

திருவனந்தபுரம், ஜுன் 15- கேரளத்தில் இருந்து சென்ற 24 பேர் குவைத் தீ விபத்தில் உயிரிழந்த துயரச் சம்பவத்தின்போதும், ஒன்றிய பாஜக அரசு பழிவாங்கும் மனப்பான் மையுடன் செயல்பட்டது. பத்து ஆண்டுகள் நீடித்த கடுமையான நீதி மறுப்பு தொடரும் என்பதை இது நிரூபிக்கிறது.

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த வர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தவர்கள் என்பதால், சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜை அனுப்பி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அவசர அமைச்ச ரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. 

தீ விபத்தில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். உறவினர்கள் அருகில் இல்லாதவர்கள், வீடு திரும்ப விரும்பு பவர்கள், காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை பெறுவது போன்ற பல பிரச்சனைகள் உள்ளன.

பேரழிவை எதிர்கொள்வதில் மாநி லம் தேவையான நடவடிக்கைகளை எடுத்தாலும், ஒன்றிய பாஜக அரசு மலி வான அரசியல் விளையாட்டுகளை விளையாடுகிறது. கேரளத்தைச் சேர்ந்த அமைச்சர் இருப்பதும் குவைத்தில் உள்ள மத்தியக் குழு வுக்கு உதவியாக இருக்கும் என்பது கூட கணக்கில் எடுத்துக்கொள்ளப் படவில்லை. வியாழனன்று காலை அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, அமைச்சருடன், கேரள மாநில சுகாதாரத் துறை இயக்குநர் கே ஜீவன் பாபுவின் பயணம் தொடர்பான அதி காரப்பூர்வ உத்தரவு வெளியிடப் பட்டது. வெளியுறவுத்துறை அமைச்ச கத்தின் இணையதளத்தில் பயண அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டது. நீண்ட நேரமாகியும் அனுமதி கிடைக் காததால், தில்லியில் உள்ள அதிகாரி கள் மூலம் ஒன்றிய அரசை தொடர்பு கொண்டனர்.

ஒன்றிய அரசின்  விசித்திரமான பதில்

ஒன்றிய இணை அமைச்சர் சென்றுள்ளார், உங்களை அனும தித்தால் மற்ற மாநிலங்களும் கோரும் என விசித்திரமான பதில் கிடைத்தது. இருப்பினும் இரவிற்குள் அனுமதி கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது.

ஆனால், விண்ணப்பம் “பரிசீல னையில் உள்ளது” என்கிற பிரிவில் இருந்தது, அவசர காலங்களில் பயண அனுமதி மறுக்கப்படுவது இது முதல் முறையல்ல. 2018 ஆம் ஆண்டில், வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட ஒரு நாட்டிற்கு உதவ வளை குடா நாடுகள் தயாராக இருந்த போது, அதை வாங்க அனுமதிக்கப் படவில்லை. முதல்வர் தலைமையி லான குழுவுக்கு தடை விதிக்கப் பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அர சாங்கத்தைத் தவிர, உலக கேரள சபா உறுப்பினர்கள் மற்றும் அயலக அமைப்புகள் வழங்கிய உதவிகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பல பயணங்களை தடுத்த ஒன்றிய அரசு

அபுதாபியில் நடந்த முதலீட்டா ளர்கள் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க கேரளா வுக்கும் அனுமதி கிடைக்கவில்லை. வளைகுடாவில் உள்ள மலையாள மிஷனின் நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் சஜிசெரியன் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. மேலும் சில பயணங்களையும் ஒன்றிய அரசு தடுத்துள்ளது.

கண்டனம்

எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் உள்ளிட்ட பலர் ஒன்றிய அரசின் தற்போதைய நிலைபாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதே சமயம், ஆளுநர் மற்றும் பாஜக தலைவர் கே.சுரேந்திரன் ஆகியோ ரின் பதில், கேரளத்தில் இருந்து சில திசைதிருப்பல்கள் நடந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறது. 

குவைத்தில் இறந்தது இந்தி யர்கள், மலையாளிகள் அல்ல என்று  ஒன்றிய  இணை அமைச்சர் சுரேஷ்  கோபி தெரிவித்துள்ளார். அவர்கள்  இந்திய பாஸ்போர்ட்டில் வெளியே செல்கிறார்கள். நாட்டின் தேவைக ளைப் பூர்த்தி செய்ய நியமிக்கப்பட்ட வர்கள். அதைச் சரியாகச் செய்கி றார்கள். வெளிவிவகார அமைச்சரிடம் பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் ஒப்ப டைக்கப்பட்டுள்ளன என்றும் சுரேஷ் கோபி தெரிவித்தார். கூட்டாட்சி அமைப்புக்குள் இருந்து கொண்டு ஒன்றிய அரசு இதைச் செய்துள்ளது. 

ஒன்றிய அரசின்  தவறான செய்தி: வி.டி.சதீசன்

சுகாதாரத்துறை அமைச்சர் வீணா  ஜார்ஜுக்கு குவைத் செல்ல அனுமதி மறுத்த ஒன்றிய அரசின் முடிவை  ஏற்க முடியாது என எதிர்க்கட்சித் தலை வர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார். பேரிடர் நடந்த இடத்தில் ஒன்றிய மற்றும் மாநில பிரதிநிதிகள் இருப்பது முக்கியம். ஒன்றிய அரசு இதில் தவறான செய்தியை அனுப்புகிறது என்றார்.



 

;