states

img

வேலையின்மைக்கும், இந்துத்துவாவிற்கும் எதிராக இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்

வேலையின்மைக்கும், இந்துத்துவாவிற்கும் எதிராக இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்

தில்லி டிஒய்எப்ஐ கருத்தரங்கில் பிரகாஷ் காரத் பேச்சு

வளர்ந்து வரும் வேலை யின்மை மற்றும் இந்துத் துவாவிற்கு எதிராக இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த  தலைவர் பிரகாஷ் காரத் கூறி னார். தில்லியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஏற்பாடு செய்த அகில இந்திய கருத்தரங்கில் அவர் இளைஞர்களுடன் கலந்து ரையாடினார். அதில்,”அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் சமத்துவமின்மை இந்துத்துவா நவ-பாசிச அரசாங்கத்தின் கொள்  கைகளின் விளைவாகும். வேலை யின்மைக்கு எதிரான போராட் டத்தை இந்துத்துவாவிற்கு எதி ரான போராட்டமாக மாற்ற வேண்  டும்.  மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளை இளைஞர்களை அணிதிரட்டுவதன் மூலம் தடுக்க வேண்டும்” என அவர் கூறினார். வேலைவாய்ப்பு அடிப்படை உரிமை தொடர்ந்து மாநாட்டைத் தொடங்கி வைத்த பொருளாதார நிபுணர் பேராசிரியர் பிரபாத் பட் நாயக்,”வேலைவாய்ப்பு உரிமை அடிப்படை உரிமைகளில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்” எனக் கூறினார்.  அதிக வேலை அழுத்தம் காரணமாக உயிர் இழந்த எர்ணா குளத்தைச் சேர்ந்த அன்னா செபாஸ்டியனின் தற்கொலையில் நீதி வழங்காத பாஜக அரசின் அலட்சியத்தை வாலிபர் சங்க அகில இந்தியத் தலைவர் ஏ.ஏ.  ரஹீம் விமர்சித்தார். சுர்ஜித் பவ னில் நடைபெற்ற கருத்தரங்கில் டிஒய்எப்ஐ, சிஐடியு, விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம் போன்ற  அமைப்புகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், அகில இந்திய  விவசாயிகள் சங்க பொதுச் செய லாளருமான விஜு கிருஷ்ணன், சிஐ டியு அகில இந்தியச் செயலாளர் ஏ.ஆர். சிந்து, அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பி. வெங்கட் உள் ளிட்டோர் பேசினர். டிஒய்எப்ஐ அகில இந்தியப் பொதுச் செயலா ளர் ஹிமக்னராஜ் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.