states

img

இந்தியாவில் கலப்பு சர்வாதிகாரம் வளர்கிறது கருத்தரங்கில் பிருந்தா காரத் பேச்சு

கருத்தரங்கில் பங்கேற்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்தை வரவேற்று சிபிஎம் திருச்சூர் மாவட்ட செயலாளர் எம்.எம்.வர்கீஸ், 
யு.பி.ஜோசப் ஆகியோர் மேடைக்கு அழைத்து வந்தனர்.

திருச்சூர், ஜுன் 15- இந்தியாவில் ஜனநாயகத்தின் வெளிப் புற மையமும் சர்வாதிகாரத்தின் உள் மைய மும் கொண்ட கலப்பு சர்வாதிகாரம் வலுப் பெற்று வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் பிருந்தா காரத் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும் முன் னாள் கேரள முதலமைச்சருமான இஎம் எஸ்.நம்பூதிரிபாட் நினைவுக் கருத்தரங்கம் திருச்சூரில் நடைபெற்றது.

இதில் ‘இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் சர்வாதிகாரம்’ என்ற தலைப்பில் பிருத்தா காரத் உரையாற்றினார். 

அவர் பேசுகையில், ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே கொள்கை என்பதே பாஜக அரசின் நிலைப்பாடு. நாடாளுமன்றத்தைக் கட்டுக்குள் வைத்து கார்ப்பரேட் நிறுவனங்க ளின் நலனைப் பின்தொடர்வது, ஜனநாயக  அமைப்புகளை படிப்படியாக அழிக்கும் போக்கு, யுஏபிஏ வழக்குகளின் எண்ணிக் கை 72 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கலாச்சாரத் தலைவர்கள் பொய்யான சாட்சியங்களில் சிறையில் அடைக்கப்படு கின்றனர். பாஜகவுக்கு தனித்து பெரும் பான்மை இல்லை என்று நிம்மதியாக இருக்க வேண்டாம். அயோத்தியில் தோல்வி அடைந்தாலும், பல மாநிலங்க ளில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதி கரித்துள்ளது. ஜனநாயக தலையீட்டின் மூலம் மட்டுமே நாடு முழு சர்வாதிகா ரத்திற்கு செல்வதை தடுக்க முடியும் என்று பிருந்தா கூறினார்.

;