states

img

சீனாவுடன் வணிக ஒப்பந்தம் செய்ய விரும்பும் இந்திய முதலாளிகள்

சீனாவுடன் வணிக ஒப்பந்தம் செய்ய விரும்பும் இந்திய முதலாளிகள்

இந்திய முதலாளிகள் சீன நிறுவனங்க ளின் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கண்டு தங்களுடைய லாபத்திற்காக அந்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற் கொள்ள கடுமையாக முயற்சி செய்து வரு கின்றன.  டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏசி  தயாரிப்பு நிறுவனமான வோல்டாஸ் (Voltas), இந்தியாவில் ஒரு கூட்டு முதலீடு செய்து கம்ப்ரசர் (compressor) உற்பத்தி ஆலையை தொடங்குவது குறித்து சீனாவின் ஹைலி  குரூப்புடன் (Highly Group) மே மாத இறுதியில் சீனாவிற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் சீன நிறுவனம், கூட்டு உற்பத்திக்கு மறுப்பு தெரிவித்து விட்டது. மாறாக தொழில்நுட்ப ரீதியிலாக இணைய மட்டுமே தயாராக இருப்பதாகக் கூறிவிட்டது.  உலகளவில் தொழில் நுட்ப  வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டுள்ள சீனா தனது சந்தை யை அனைத்து நாடுகளுக்கும் விரிவுபடுத்தி வரு கிறது. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள், பிரேசில் உள்ளிட்ட வளரும் நாடுகளில் உள்ள  முதலாளிகள் சீன நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பி அதற்கான முயற்சி களை முன்னெடுத்து வருகின்றனர்.  சீனாவின் தொழில் நுட்பம் வேண்டும்  இந்தியா இறக்குமதி செய்யும் மின்னணு உதிரி பாகங்கள் 70-75 சதவீதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை. இதுதவிர தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளிலிருந்து வரும் உதிரிபாகங்களும் பெரும்பாலும் சீன நிறுவனங்களால் தயாரிக் கப்படுகின்றன. இந்நிலையில் இந்திய நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் இணைந்து உதிரிபாகங்கள் உற்பத்தி செய்வது தொடர்பான திட்டத்தில் இணைய வேண்டும் என்பதே பொருளாதார உண்மை. அவர்களுடைய மூலதனத்தை விட, அவர்களுடைய தொழில்நுட்பமே நமக்கு அதிகம் தேவை என்று பெயர் குறிப்பிட விரும் பாத இந்தியாவின் மிகப்பெரிய எலெக்ட்ரா னிக்ஸ் ஒப்பந்த உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.  மாறிவரும் புவிசார் அரசியல் சூழ்நிலையை சீனா புரிந்துகொண்டுள்ளதுடன் கூட்டு உற்பத்தி முயற்சிகளில் அதிகமாக முதலீடு செய்யாமல் 20-30 சதவீதம் அளவிற்கு சிறிய அளவிலான பங்குகளை வைத்துக்கொண்டோ அல்லது ஒரு தொழில்நுட்பக் கூட்டணியை மட்டும் மேற்கொள்ளவோ அந்நாட்டு நிறுவ னங்கள் தயாராக உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.  டிக்ஸன் டெக்னாலஜிஸ் (Dixon Techno logies), பிஜி எலெக்ட்ரோபிளாஸ்ட் (PG Electro plast), இபாக் டூரபிள் (Epack Durable) மற்றும் பகவத் ப்ராடக்ட்ஸ் (Bhagwat products) போன்ற பல உள்நாட்டு எலெக்ட்ரானிக்ஸ் பொ ருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பல சீன நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. சில சீன நிறுவனங்கள் உற்பத்தி ஒத்துழைப்புக்கு மட்டும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  சீனாவின் ஹைலி குரூப் மற்றும் நொய்டாவைச் சேர்ந்த பிஜி எலெக்ட்ரோ பிளாஸ்ட் ஒரு தொழில்நுட்பக் கூட்டணியை ஏற்கனவே இறுதி செய்துள்ளன.