states

img

மாணவர்களிடம் தமிழ்நாடு அரசுக்கு எதிராக பேசிய ஆளுநர் ரவி

சென்னையில் உள்ள ராஜ்பவன் தர்பார் அரங்கில் சிவில் சர்விஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கலுடன் நடந்த கலந்துறையாடலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பல சர்சைக்குறிய கருத்துக்களை பேசியுள்ளது பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
  அவர் கூறியதாவது : ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் உள்ளது என்றால் அதற்கு நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதுதான் பொருள். வார்த்தை அலங்காரத்துக்காக தான் இருப்பில் உள்ளது என கூறுகிறோம் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.தமிழ்நாட்டில் இருந்து இதுவரை அனுப்பப்பட்ட 20 மசோதாக்கல் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று ஸ்டெர்லைட் பற்றி பேசிய ஆளுநர், வெளிநாட்டு அமைப்புகள் சில ஏராளமான பணத்தை கொடுத்து உள்ளூர் மக்களை போராட்டத்திற்கு தூண்டிவிட்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டது. இந்தியாவில் 40 சதவிகித காப்பர் ஸ்டெர்லைடில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது இதனால் தற்போது கப்பரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. கூடங்குளம் அணு உலை போராட்டத்திற்கும் வெளிநாட்டு நிதியே காரணம் எனவும் சர்ச்சைக்குறிய விதமாக பேசியுள்ளார். அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

;