states

img

முதியவரின் மனுவை திருப்பிக் கொடுத்த சுரேஷ் கோபிக்கு வலுக்கும் கண்டனம்!

கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் முதியவர் ஒருவர் அளித்த மனுவை திருப்பிக் கொடுத்த பாஜக எம்.பி சுரேஷ் கோபிக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகிறது.

கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர், மழையால் இடிந்த தனது வீட்டைச் சரிசெய்ய உதவிக் கோரி பாஜக எம்.பி. சுரேஷ் கோபியிடம் மனு ஒன்றை கொடுத்தபோது, “இது எம்.பி-யின் வேலை அல்ல, பஞ்சாயத்தில் சொல்லுங்கள்” என்று தெரிவித்து சுரேஷ் கோபி மனுவை திருப்பிக் கொடுத்துள்ளார். சுரேஷ் கோபி-யின் இந்த அலட்சியமான பதிலுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இதை தொடர்ந்து, இப்பிரச்சனையை கையில் எடுத்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் திருச்சூர் மாவட்ட செயலாளர் அப்துல் காதர் முதியவரின் வீட்டை கட்டித்தரும் பணியை சிபிஎம் மேற்கொள்ளும் என அறிவித்துள்ளார்.