states

img

விவசாயிகள் மீது தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்திய இளைஞர் மீது கொலை முயற்சி வழக்காம்

தில்லி சலோ போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மீது தண்ணீர் பாய்ச்சும் இயந்திரத்தை நிறுத்திய இளைஞர் மீது காவல்துறை கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளது. 
விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கில் மோடி அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தில்லி சலோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில்  அரியானா காவல் துறை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பாய்ச்சியும் போராடும் விவசாயிகளை தடுக்க முயன்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட இளம் விவசாயி நவ்தீப் சிங் காவல்துறையினரின் தடுப்புகளை எல்லாம் இடித்து தள்ளிவிட்டு தனது டிராக்டரில் சென்று தண்ணீர் டேங்கர் மீது ஏறி  தண்ணீர் பாய்ச்சிய இயந்திரத்தை நிறுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அரியானா காவல்துறை நவ்தீப் மற்றும் பாரதிய விவசாய மாநில சங்கத்தலைவர் குர்நாம் சிங் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளது- 
நவ்தீப் சிங் கடந்த 2015ம் ஆண்டு குருஷேத்ரா பல்கலையில் பட்டப்படிப்பை முடித்து விட்டு விவசாயியும் சமூக ஆர்வலருமான தந்தை ஜெய்சிங்குடன் இணைந்து விவசாயம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

;