உத்திரப்பிரதேசத்தில் சங்பரிவார கும்பல் இஸ்லாமியர்களின் கல்லறைய அடித்து நொறுக்கியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சங்பரிவார இயக்கங்கள் இந்து-இஸ்லாமியர் இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக மசூதிக்கு கீழே இந்து கோவில் உள்ளது என்று கூறி பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று உத்திரபிரதேச மாநிலம், ஃபதேபூரில் 200 ஆண்டுகள் பழமையான மக்பார என்கிற இஸ்லாமியர்களின் கல்லறை, சிவன் கோவில் மீது கட்டப்பட்டுள்ளதாக கூறி சங்பரிவார கும்பல்கள் காவி கொடியுடன் சென்று ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டு இஸ்லாமியர்களின் கல்லறைய அடித்து நொறுக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.